12 மாவட்டங்களில் கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக.. அதிமுகவிற்கு 0 இடங்களே கிடைக்கும்.. வெளியான சர்வே!
சென்னை: அக்னி நியூஸ் சர்வீசஸ் (Agni News Services) வழங்கியுள்ள 2026 தமிழ்நாடு தேர்தல் கருத்துக்கணிப்பு அறிக்கையின்படி, அதிமுக+ கூட்டணி 12 மாவட்டங்களில் 0 இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது:
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 34,220 வாக்காளர்களிடம் அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் நடத்திய மெகா சர்வே வெளியாகி உள்ளது. சர்வே முடிவுகளின்படி, இப்போதைக்கு ஆளுங்கட்சியான தி.மு.க கூட்டணிதான் 'கிங்'. அதாவது ஆளும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பதவி ஏற்பார். எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமரும். இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடையும்.

தி.மு.க கூட்டணி: 45.4% வாக்குகளை வென்று, ஆட்சி அமைக்கும் .
அ.தி.மு.க கூட்டணி: 35.3% வாக்குகளை வெல்லும்.
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 11.5% வாக்குகளை வெல்லும்.
விஜய்யின் தவெக முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை (11.5%) எட்டிப் பிடித்திருப்பது, திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஒரு சிறிய 'டென்ட்' போட்டிருப்பதை உறுதி செய்கிறது.
அதே சமயம் அக்னி நியூஸ் சர்வீசஸ் (Agni News Services) வழங்கியுள்ள 2026 தமிழ்நாடு தேர்தல் கருத்துக்கணிப்பு அறிக்கையின்படி, அதிமுக+ கூட்டணி பின்வரும் 12 மாவட்டங்களில் 0 இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது:
திருவள்ளூர் (10 தொகுதிகள்)
சென்னை (16 தொகுதிகள்)
காஞ்சிபுரம் (4 தொகுதிகள்)
நீலகிரி (3 தொகுதிகள்)
கரூர் (4 தொகுதிகள்)
திருச்சிராப்பள்ளி (9 தொகுதிகள்)
பெரம்பலூர் (2 தொகுதிகள்)
திருவாரூர் (4 தொகுதிகள்)
தஞ்சாவூர் (8 தொகுதிகள்)
இராமநாதபுரம் (4 தொகுதிகள்)
அரியலூர் (2 தொகுதிகள்)
மயிலாடுதுறை (3 தொகுதிகள்)
இந்தக் கருத்துக்கணிப்பின்படி, மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் திமுக+ (DMK+) கூட்டணி முழுமையாகக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீட் கணக்கு: கோட்டையில் யார்?
வாக்கு சதவீதத்தை விட, அது இடங்களாக மாறும்போதுதான் மேஜிக் நிகழ்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முன்னிலை நிலவரம்:
தி.மு.க கூட்டணி: 178 இடங்கள் வென்று ஆட்சி அமைக்கும். அதோடு தனிப்பெரும் மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும். இதனால் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. யாரும் ஆட்சியில் பங்கு கேட்க வாய்ப்பு இல்லை.
அ.தி.மு.க கூட்டணி: 56 இடங்கள் வெல்லும்.
தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பிரித்தாலும், அவை தொகுதிகளாக மாறுவதில் இன்னும் சில சவால்கள் இருப்பதை சர்வே காட்டுகிறது.
இந்த சர்வேயின் மிக முக்கியமான 'அலார்ட்' இதுதான். சுமார் 21 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது 5% க்கும் குறைவாகவே இருக்கிறது. அதாவது, கடைசி நேர திசைமாற்றங்கள் இந்த தொகுதிகளின் முடிவை மாற்றக்கூடும். இங்கு தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகள்தான் அ.தி.மு.க அல்லது தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக (Deciding Factor) இருக்கப்போகிறது.
தி.மு.க கூட்டணி தற்போதைக்கு பலமாகத் தெரிந்தாலும், அ.தி.மு.க தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்கப் போராடுகிறது. விஜய்யின் தவெக 11% வாக்குகளைத் தட்டிச் செல்வது வரும் காலங்களில் தமிழக அரசியலில் ஒரு புதிய 'முக்கோணப் போட்டிக்கு' வித்திட்டுள்ளது. 5 சதவீதத்திற்கும் குறைவான இடைவெளி கொண்ட அந்த 21 தொகுதிகள்தான் 2026-ன் கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications