சல்லி சல்லியாய் நொறுங்கும் கூட்டணி கணக்கு! விஜயுடன் கை கோர்க்கும் ராகுல்! இப்படி ஒரு மாஸ்டர் ப்ளானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் மாற தொடங்கி இருக்கிறது. திமுகவுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் சற்று விலகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதால் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என்கின்றனர். கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக அதனை பயன்படுத்திக் கொள்ள காங்., திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தியும் முதற்கட்ட பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்ட நிலையில் விரைவில் டெல்லி செல்கிறார் விஜய்.

2026 தேர்தல் கடந்த தேர்தல்களைப் போல இருக்காது என சொல்லப்படுகிறது. காரணம் அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகள் தொடர்ந்து கோலோச்சி வரும் நிலையில், தேசிய கட்சியாக இருந்தாலும் சிறு கட்சிகளாக இருந்தாலும் இந்த இரு கட்சிகளை நம்பி தான் பயணிக்க வேண்டி இருந்தது.

50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆண்டு வருகின்றன. ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. பாஜக கிட்டத்தட்ட அதே நிலையில் தான் தொடர்கிறது.

Vijay Rahul Gandhi TVK

இடையில் விஜயகாந்த், நாம் தமிழர் போன்ற கட்சிகள் வந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தமிழக அரசியலில் புது வரவாக விஜய் வந்திருக்கிறார். பல ஆண்டுகளாகவே அதிமுகவுக்கு குரல் கொடுத்து வந்த விஜய் தற்போது நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார். விஜய் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது தேர்தலின் போது தான் தெரிய வரும். ஆனால் 10 முதல் 20 சதவீத ஆதரவு விஜய்க்கு கிடைக்கும் என பலரும் சொல்லி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் திமுக, அதிமுக கூட்டணியில் எழுந்திருக்கிறது.

ஆனால் பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு இல்லை, கூட்டணி மட்டும்தான். அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. காங்கிரசும் திமுக கூட்டணியில் இதே போல பேசி வரும் நிலையில் திமுக அதற்கு உடன்படாது என்பது நிச்சயம். இந்த நிலையில் விஜய் தனது முதல் மாநாட்டின் போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் திமுகவுடன் சற்றே விலகி இருக்கும் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்காக ரகசிய பேச்சு நடந்து வருவதாகவும் விரைவில் ராகுல் காந்தியை விஜய் சந்திக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் வைத்து ராகுல் காந்தி ஒரு கணக்கு போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக அளவில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இருந்தாலும், கேரளாவில் இரு கட்சிகளும் இரு துருவங்களாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கூட்டங்களில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் கூட்டங்களில் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை. வட இந்திய நிகழ்வுகளில் மட்டுமே காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்தடுத்து இரண்டு முறை கேரளாவில் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. திமுக கூட்டணியால் தமிழகத்தில் மட்டுமே செல்வாக்கு இருக்கும் நிலையில் கேரளாவில் ஒரு பிரபலத்தின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது. கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய இளைஞர் ஆதரவு இருப்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்த போதே அந்த கட்சியின் கொடியை கேரள இளைஞர்கள் கொண்டாடினர். அதே நேரத்தில் தமிழக கட்சி கழகம் என பெயர் வைத்ததால் தங்களால் அரசியலில் ஈடுபட முடியவில்லை என்ற வருத்தத்தையும் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் விஜய் உடன் கூட்டணி வைத்தால் அது கேரளாவிலும் கை கொடுக்கும் என்பது காங்கிரசின் கணக்கு. அதை ஒட்டி பேச்சு வார்த்தைகளும் மறைமுகமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் ஒரு காலத்தில் திமுகவிடம் 60 சீட்டுகளைப் பெற்ற காங்கிரஸ் கடந்த தேர்தலில் 25 சீட்டுகளுக்கு தள்ளப்பட்டது. இந்த தேர்தலில் அதுவும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி. எனவே தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தால் குறிப்பிட்ட அளவு சீட்டுகள் கிடைப்பதோடு உள்ளூர் நிர்வாகிகளையும் சமாளிக்க முடியும். கேரளாவிலும் விஜயின் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது காங்கிரஸ் தேசிய தலைமையின் திட்டம். தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி அளவில் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி செல்லும் விஜய் ராகுல் காந்தியை சந்திப்பார் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+