சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகி இருக்கும் சூழலில், வடமாவட்டங்களில் கணிசமாக இருக்கும் வன்னியர்கள் வாக்கு வங்கியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே வட மாவட்டங்களில் தலித் வாக்குகளை விஜய் பிரிக்கும் சூழலில், வன்னியர்கள் வாக்குகளிலும் பிரிவினை ஏற்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக வெளியேறி இருக்கிறது தமிழக வாழ்வுரிமை கட்சி. திமுகவிடம் வைத்த கோரிக்கைகளை ஏற்கவில்லை என்பதால், இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் தவாகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளது.

விழுப்புரம், கடலூர், திண்டிவனம், பெரம்பலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தவாகவுக்கு செல்வாக்கு உள்ளது. தமிழ் தேசிய கொள்கை பிடிப்புடன் வேல்முருகன் அரசியல் செய்து வருவதால், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் கணிசமானோர் தவாக பக்கம் வருகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் தவாக வேகமாக வளர்ந்து வந்தது.
அதேபோல் வன்னியர்களின் முகமாக இருக்கும் பாமக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துவிட்டது. இதனால் சுமார் 60 முதல் 70 சதவிகித வன்னியர்களின் வாக்குகள் அதிமுக கூட்டணி பக்கம் செல்லும் என்று கணக்கிடப்படுகிறது. கடந்த தேர்தலில் வன்னியர்களின் முகமாக இருந்த வேல்முருகன் திமுக பக்கம் இருந்தார்.
இதனால் வட மாவட்டங்களில் உள்ள தலித் வாக்குகளை திருமாவளவன் மூலமாகவும் மற்றும் வேல்முருகன் மூலம் ஓரளவிற்கு வன்னியர்களின் வாக்குகளையும் திமுக அறுவடை செய்தது. ஆனால் இம்முறை வட மாவட்டங்களில் திமுகவுக்கு இந்த இரு வாக்கு வங்கிகளிலும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் வட மாவட்டங்களில் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், தலித் வாக்குகள் கிடைக்காது என்பதை கணக்கிட்டே திருமாவளவனுக்கு திமுக முன்னுரிமை அளித்தது. இருப்பினும் தலித் வாக்குகளை கணிசமான அளவிற்கு விஜய் கைப்பற்றுவார் என்று தெரிகிறது. தற்போது வன்னியர்கள் முகமாக சில மாவட்டங்களில் இருந்து வரும் வேல்முருகனும் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் கூட்டணி கணக்கில் ஸ்டாலின் முடிவு சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications