தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல்.. மார்ச் 8 வெளியாகப்போகும் அறிவிப்பு.. பிஎல் சந்தோஷ் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம் என்று பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 8 முதல் 12ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்றும் பிஎல் சந்தோஷ் பேசி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக தரப்பில் வாரத்திற்கு 2 மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பில் பொதுக்கூட்டம், தேர்தல் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளை விரைவாக நடந்து வருகிறது. இதனிடையே நாளை மறுநாள் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக தேர்தல்
இந்த இடைக்கால பட்ஜெட்டில் திமுக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவினர் பணிகளை தொடங்கி மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இறுதி வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. அதற்கேற்ப தேர்தல் ஆணைய நிர்வாகிகளும் தமிழ்நாட்டில் ஆலோசனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 மாநிலத் தேர்தல்
தமிழ்நாடு மட்டுமல்லாமல் அசாம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. 5 மாநிலத் தேர்தல் நடந்த பின், ஒரே நாளில் தேர்தல் முடிவுகளில் வெளியாகும் என்று தெரிகிறது. 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இப்படியான பாணியே பின்பற்றப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக முதலிலேயே தேர்தல் நடந்து முடிந்தது.
பிஎல் சந்தோஷ் பேசிய தகவல்
இருப்பினும் சுமார் ஒரு மாதத்திற்கு பின் முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் மையக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் பங்கேற்றார். அப்போது பிஎல் சந்தோஷ் பேசுகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 11ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம் என்று பேசி இருக்கிறார்.
தேர்தல் அறிவிப்பு எப்போது?
சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 8 முதல் 12ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்று பிஎல் சந்தோஷ் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் தாமதமாகும் என்று தெரிகிறது. இதன் காரணமாகவே தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 3 வாரங்கள் வரை பிடிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications