சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கும் நிலையில், பொன்முடி ஏற்கனவே விருப்ப மனு அளிக்கவில்லை. இருப்பினும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட பொன்முடி மகன் கவுதம சிகாமணி விருப்ப மனு கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் அடையாளமாக இருந்த பொன்முடி, 2011 சட்டசபைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியிலேயே சிவி சண்முகத்திடம் தோல்வி அடைந்தார். இதன்பின் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட தொடங்கினார். 8 முறை எம்எல்ஏ-வாக இருந்த பொன்முடி, இம்முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கூட அளிக்கவில்லை.

கடந்த ஆண்டு சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் பொன்முடி பதவியை பறி கொடுத்தார். இதன்பின் திமுகவில் பொறுப்பு அளிக்கப்பட்டாலும், அமைச்சர் பதவி இல்லாததால், பொன்முடி பல்வேறு விவகாரங்களில் ஒதுங்கியே இருந்தார். அதேபோல் தனது மகனுக்கு சீட் பெற்றுக் கொடுக்கும் முடிவுக்கு பொன்முடி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் விழுப்புரத்தில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற கணக்கில் விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியில் கவுதம சிகாமணிக்கு சீட் கேட்டிருக்கிறார் பொன்முடி. ஆனால் இரு தொகுதிகளிலும் திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்களின் தொகுதியை மாற்றினால் சிக்கல் உருவாகும் என்று பென் டீம் தரப்பு எச்சரித்துள்ளது.
இதனால் முதல்வர் ஸ்டாலினும் அந்த தொகுதிகளை கொடுக்க முடியாது என்று கூறியதால், மகனுக்காக அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறாராம் பொன்முடி. இதனால் திருக்கோவிலூர் தொகுதியில் விருப்ப மனு கூட பொன்முடி அளிக்கவில்லை. ஆனால் திருக்கோவிலூர் தொகுதிக்காக கவுதம சிகாமணி விருப்ப மனு கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்னும் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள கவுதம சிகாமணி, திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட பொன்முடி விருப்ப மனு அளிக்கவில்லை என்று உறுதி செய்துள்ளார். இதே போல் துரைமுருகனும் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா












Click it and Unblock the Notifications