விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி!
சென்னை: திமுக சார்பாக தென் மாவட்டங்களில் இருந்து தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்த முதல்வர் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார் என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 34 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தரப்பில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, மறுபுறம் வேட்பாளர்களுக்கான நேர்காணல், மறுபக்கம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்று அண்ணா அறிவாலயம் பரபரப்புடன் காணப்படுகிறது.

அந்த வகையில் திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கி இருக்கின்றனர். நேற்று 2வது நாளாக நடந்த நேர்காணலில் தூத்துக்குடி, நெல்லை, தேனி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது ஒவ்வொரு நிர்வாகியிடமும் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் ஸ்டாலின் கேட்டறிந்திருக்கிறார்.
அதேபோல் நேர்காணலில் பங்கேற்ற பலரிடமும், உங்கள் தொகுதியில் விஜய் கட்சி எவ்வளவு வாக்குகளை பெறும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். தொடர்ந்து, தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். யாரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கவலைப்படக் கூடாது. இம்முறை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும்.
அதேபோல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், திமுகவினர் பணியாற்ற வேண்டும். நிர்வாகிகளின் உழைப்புக்கேற்ற பொறுப்பு நிச்சயம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் நேர்காணலில் கூட விஜய் கட்சி தொடர்பாக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் விசாரித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள் -
ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெல்வாரா? வெறும் 20 பேர்தானாமே! குஷியில் இனிகோ இருதயராஜ்! -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட்












Click it and Unblock the Notifications