தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மண் எடுக்க முடியாத இரண்டு தொகுதிகள்.. ஆச்சர்யம் தரும் வரலாற்று உண்மை!
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. ஆனால் தமிழக தேர்தல் வரலாற்றில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இதுவரை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வென்றதே இல்லை என்ற தகவல் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.
திராவிட கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் அந்த இரண்டு தொகுதிகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளக்கரையோரம் உள்ள கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் தான் அவை. இந்த இரண்டு தொகுதிகளிலும் இதுவரை அதிமுகவோ திமுகவோ ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி மிகவும் பழமையானது. இந்த தொகுதி திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த 1952லேயே அங்கு காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் செல்வாக்கை நிலை நிறுத்திவிட்டது. அதன் பிறகு இந்த தொகுதி சென்னை மாகாண சட்டசபைக்கு உரிய தொகுதியாக 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து கடந்த 2021 தேர்தல் வரை இதுவரை திராவிட கட்சிகள் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதில்லை.
இந்த தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் எனப்படும் நிறுவன காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் சார்புடைய கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன என்பது வரலாற்று உண்மை. இதற்கு இணையாக அதே பழமை மாறாத திருவாங்கூர் கொச்சி சட்டமன்ற ஆளுகைக்கு உட்பட்ட தொகுதியாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 1952 முதல் காங்கிரஸ் வசமே உள்ளது.
இந்த தொகுதியில் ரப்பர் தோட்டங்கள் அதிகம் உள்ளதால் தொழிற்சங்கங்களின் ஆதிக்கம் கணிசமாக உள்ளது. இதனால் காங்கிரசுக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தொகுதியில் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தின் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிகளில் இதுவரை திராவிட கட்சிகள் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.
அதன் தொடர்ச்சியாகவே இந்த முறையும் இரண்டு தொகுதிகளையும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளன. இப்படி திராவிட கட்சிகளுக்கு எதிரான வரலாற்று பின்னணி உள்ள கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சியான, வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள காங்கிரஸ்க்கு ஒதுக்கி உள்ளது.
ஆனால் அதிமுக கூட்டணியில் விளவங்கோடு தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கும் கிள்ளியூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் டஃப் ஃபைட் கொடுப்பார் என்பதால் கிள்ளியூர் தொகுதியின் முடிவு என்னவென்பது தான் டுவிஸ்டே!
- சிறப்பு நிருபர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications