மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த சூழலில், இந்த முறை 4 தொகுதிகளாக குறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கையில் கிடைத்த தகவல்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே முஸ்லீம் லீக், மமக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை திமுக வெற்றிகரமாக முடித்தது. அதுவும் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக முடித்த பின், முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாகினார்.

இருப்பினும் மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்படவில்லை. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், தேர்தல் பணிகளில் திமுக ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் ஒரு கட்சியுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய பேச்சுவார்த்தைக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
அந்த வகையில் நேற்றிரவு மதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக சிறப்பாக முடித்துள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 6 மதிமுக வேட்பாளர்களில் 4 பேர் வென்றனர். ஆனால் இம்முறை மதிமுகவுக்கு 4 தொகுதிகளாக குறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்த போது இந்த முறை மதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய திமுக முன் வந்தது.
ஆனால் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே வைகோவிடம் வேண்டுகோளாக வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே மதிமுக உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. ஆனால் துரை வைகோ நிச்சயமாக ஒரு தொகுதியிலாவது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.
இதன்பின் வைகோ தரப்பில் ஒரு தொகுதியில் சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று கூறிய பின், திமுக தரப்பில் 4 தொகுதிகள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் சிபிஐ, சிபிஎம், தேமுதிக மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications