பாஜகவுக்கு கிடைத்த திடீர் சந்தோஷம்.. கை தூக்கி விட்ட தபால் ஓட்டுக்கள்.. அதிமுக கூடுதல் பலம்!
பாஜகவுக்கு தபால் ஓட்டுக்கள் கை கொடுத்துள்ளன
சென்னை: பாஜக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புள்ள 4 தொகுதிகளிலும் அவர்களுக்கு தபால் ஓட்டுக்கள்தான் கை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த முறை அனைத்து கருத்து கணிப்புகளிலும் பாஜவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றார்கள்.. 3 தொகுதிகளில் வேண்டுமானால் டஃப் தரலாமே தவிர, ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றார்கள்..
அதே போலத்தான் தற்போது 4 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. சில நேரம் இது 5 ஆக உயருகிறது. பிறகு குறைகிறது. மாறி மாறி டிரெண்டிங் வருகிறது.

எல்.முருகன்
நோட்டாவை தாண்ட மாட்டார்கள் என்று கால காலமாக சொல்லி வந்த நிலையில், எச்.ராஜா, எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் இருக்கின்றனர். அதேசமயம், கணிசமான வாக்குகள் முன்னிலையில்தான் இவர்கள் உள்ளனர். இவர்களுக்கு தபால் ஓட்டுக்கள்தான் கை கொடுத்துள்ளன.

காரணம்
இவர்கள் மட்டுமல்லாமல் பல தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் தபால் வாக்குகள்தான் வெற்றியை நிர்ணயிக்கும் நிலை உருவாகியுள்ளது... அதுதான் முக்கியக் காரணியாக இந்த தேர்தலிலும் அமையும் எனத் தெரிகிறது... பல தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வித்தியாசம்தான் என்றாலும், இதற்கு முக்கியக் காரணம் தபால் வாக்குகள்.

அதிருப்தி
பாஜக மீது மக்களுக்கு எவ்வளவோ அதிருப்திகள் உள்ளன.. நேரடியான கோபங்கள் உள்ளன.. பல விஷயங்களில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் உள்ளன.. இந்த காரணங்களுக்காகத்தான் அதிமுகவும் நிறைய வெறுப்பை சம்பாதித்தது.. இந்த தேர்தலைப் பொறுத்தவரை அதிமுகவின் முழுமையான பலத்தில்தான் பாஜக சில தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

முடிவு
கூடுதலாக தபால் வாக்குகள் கை கொடுத்துள்ளன. அதிமுகவுக்கே கூட பல தொகுதிகளில் தபால் வாக்குகள்தான் கை கொடுத்துள்ளன. தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரிய வரும்போதுதான் இந்த தேர்தலில் எத்தனை தொகுதிகளில் வெற்றி தோல்வியை தபால் வாக்குகள் முடிவு செய்துள்ளன என்பது தெரிய வரும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications