Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரண்ட் பில் கன்னாபின்னாவென உயர போகுது.. அலறும் மின்வாரியம்.. எகிறும் மின் தேவை.. இப்பவே கண்ணை கட்டுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக மின்வாரியம் புதுபுது அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு வசதியை செய்துதர முடிவு செய்துள்ளது.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் போதுமான அளவுக்கு நமக்கு கிடைப்பதில்லை என்பதால்தான், மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

TN Electricity Board and Do you know, Electricity demand has rise 17,000 MW for the first time

எச்சரிக்கை: இருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதமான கோடை காலத்தில், மின் தேவையானது, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.. அப்போதே மத்திய அரசு ஒரு எச்சரிக்கையை தமிழகத்துக்கு வழங்கியிருந்தது.. அதன்படி வரும் 2024 ஜனவரியில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியிருந்தது.

இதற்கெல்லாம் காரணம், புதிய குடியிருப்புகள், செல்போன், லேப்டாப் சாதனங்களின் பயன்பாடு, பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு, தனிநபர் மின் பயன்பாடு அதிகரித்து வருவதுதான் என்கிறார்கள்.

ஓவர் லோடு: இதுபோக, ஓவர்லோடு பிரச்சனையும் ஏற்பட்டுவருவதால், மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.. இன்னும் சில மாதங்களில் கோடை காலமும் தொடங்கிவிட்டால், தமிழகத்தின் மின் தேவை, எப்படியும் 20,000 மெகா வாட்டை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இப்போதே மின்தேவை எகிறிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.. அதாவது, சென்னை - தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக இருந்துவரும்நிலையில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் துவங்கிவிட்டதால், அனைத்து தொழில் நிறுவனங்களும் முழுவீச்சில் செயல்படுகின்றன..

மின்தேவை: இதன்காரணமாக, மின் தேவையானது, கடந்த 26ம் தேதி, 17,300 மெகா வாட்டாகவும், நேற்று முன்தினம் 17,050 மெகா வாட்டாகவும் உயர்ந்துவிட்டது.

இந்த அக்டோபர் மாதத்தில், இந்த அளவு மின் தேவை இருப்பது, இதுவே முதல்முறை என்கிறார்கள். ஆனால், இதுவே, கடந்த 2020 அக்டோபரில் மின் தேவை அதிகபட்சமாக 14,980 மெகா வாட்டாகவும், 2021 அக்டோபரில் 14,750 மெகா வாட்டாகவும், 2022ல், 15,500 மெகா வாட் என்றளவில் மட்டுமே இருந்த நிலையில், இப்போது திடீரென உயர்ந்துவிட்டது.

இந்த ஏற்ற இறக்கத்துக்கு காரணம், அந்தந்த மாதங்களில் பெய்த மழைதான்.. இந்த முறை போதுமான அளவுக்கு மழை இல்லாததால், மின் தேவை குறையவில்லை. அத்துடன் தேவையும் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.. இதை அறிந்தே, முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக மின்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.. தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதை கை விட வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் நிலுவையில் உள்ள படித்தொகைக்காக அமைக்கப்பட்ட குழு பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட ஆகிய 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 2ம்தேதி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தப்படுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+