மின்சார வாரியம் அதிரடி.. இனி வாய்ப்பேயில்லை.. மின்துறையின் புதுஅதிரடி.. குஷியில் சென்னை, மதுரை, கோவை
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக மின்வாரியம் புதுபுது அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு வசதியை செய்துதர முடிவு செய்துள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது.

ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
கோடைக்காலம்: எனினும் இந்த வருடம், குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதமான கோடையில், மின் தேவையானது, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.. அதாவது, 19387 மெகா வாட்டாக அதிகரித்திருந்தது.
அதேபோல, மத்திய அரசு ஒரு எச்சரிக்கை கலந்த அறிவுறுத்தலை தமிழகத்துக்கு வழங்கியிருந்தது.. அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் வரும் மாதங்களில் அதிகரிக்க போகும், மின் தேவை மின் உற்பத்தி பற்றாக்குறை உள்ளிட்ட விபரங்களை மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய அரசு முன்கூட்டியே தெரிவித்து வருகிறது.. அந்தவகையில், தமிழகத்துக்கும் ஒரு வார்னிங் + அட்வைஸ் தந்திருந்தது.
அதன்படி வரும் 2024 ஜனவரியில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியிருந்தது. கடந்த 2022 - 23ல் தனிநபர் மின் நுகர், 1,640 யூனிட்களாக அதிகரித்தும்விட்டது.. இதற்கெல்லாம் காரணம், புதிய குடியிருப்புகள், செல்போன், லேப்டாப் சாதனங்களின் பயன்பாடு, பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதுதான், தனிநபர் மின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்று சொல்கிறார்கள்.
ஓவர்லோடு பிரச்சனை: இதுபோக, ஓவர்லோடு பிரச்சனையும் ஏற்பட்டுவருவதால், மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில், மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த இடங்களிலுள்ள டிரான்ஸ்பார்மர்கள், ஓவர்லோடு காரணத்தினால் பழுதாவதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டுவிடுகிறது. இன்னும் சில மாதங்களில் கோடை காலமும் தொடங்கிவிட்டால், தமிழகத்தின் மின் தேவை, எப்படியும் 20,000 மெகா வாட்டை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை: அதனால்தான்,இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எங்கெல்லாம் மின்னழுத்த பிரச்சனை வருகிறதோ, அங்கெல்லாம் சீராக மின் வினியோகம் செய்ய கூடுதல் மின் சாதனங்கள் நிறுவப்பட உள்ளது..
இதற்காக இப்போது, 200 கோடி ரூபாய் திட்ட செலவில், 250 கேவிஏ எனப்படும், "கிலோ வோல்ட் ஆம்பியர்" திறனில், 2,500 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட உள்ளதாம்.. இவைகளையெல்லாம் சென்னையிலும், அதைசுற்றியிருக்கும் சுற்றிய மாவட்டங்களிலும் பொருத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெருநகரங்களில், அடிக்கடி கரண்ட் கட் என்ற பிரச்சனைகள் வெகுவாக குறையும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications