மின்சார வாரியம் சரவெடி.. விளாசும் வடகிழக்கு பருவமழை.. அப்பப்போ கரண்ட் போயிடுமா? ஸ்மார்ட் தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் இனி கரண்ட் பிரச்சனைக்கு அவ்வளவாக வாய்ப்பே இருக்காது என்று மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது. பருவமழை துவங்கிவிட்ட நிலையில், தமிழக அரசின் இந்த தகவலானது, பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கோடை காலம்: அதுவும், கடந்த ஏப்ரல் மாதமான கோடையில், மின் தேவையானது, அளவுக்கு அதிகமாகவே அதிகரித்தது.. அதாவது, 19387 மெகா வாட்டாக அதிகரித்தது. இதில், சென்னையில் மட்டுமே, ஒருநாள் மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது.. மொத்தத்தில், தமிழகம் முழுவதும் உச்சபட்ச மின்நுகர்வு ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்திருந்தது..
இதற்கு பிறகு, மத்திய அரசு ஒரு எச்சரிக்கை கலந்த அறிவுறுத்தலை தமிழகத்துக்கு தந்திருந்தது. அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் வரும் மாதங்களில் அதிகரிக்க போகும், மின் தேவை மின் உற்பத்தி பற்றாக்குறை உள்ளிட்ட விபரங்களை மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய அரசு முன்கூட்டியே தெரிவித்துவிடும்.
வார்னிங்: அப்படித்தான் 2 மாதங்களுக்கு முன்பு, தமிழகத்துக்கு ஒரு வார்னிங் தரப்பட்டிருந்தது. அதில், 2024 ஜனவரியில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இதையடுத்து, தமிழக மின்வாரியம், பல்வேறு துரித நடவடிக்கைகளை கையில் எடுத்தது.. அத்துடன், தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கும் நிலையில், மின்தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், கூடுதல் நடவடிக்கைகளை கையில் எடுத்தது.. அதனால்தான், இப்போதுவரை, மின்பற்றாக்குறை ஏற்படாத அளவுக்கு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) சமாளித்து வந்துள்ளது.
பருவமழை: இப்படிப்பட்ட சூழலில், ஒரு நம்பிக்கை செய்தி வெளியாகி உள்ளது.. அதாவது, பருவமழையும், பண்டிகை கால விடுமுறையும் சேர்ந்து மின்தேவையை வெகுவாக குறைத்திருக்கின்றவாம். தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையானது, சராசரியாக 14,000 மெகாவாட் ஆக இருந்த நிலையில், தற்போது 10,000 மெகாவாட்டாக குறைந்துள்ளதாம்..
சென்னையில் சராசரி மின் தேவை 4,000 மெகாவாட்டில், 2,340 மெகாவாட் குறைந்திருக்கிறக்கிறதாம். தீபாவளி தினத்தன்று, வழக்கமாக, சராசரி மின் பயன்பாடு 320 மில்லியன் யூனிட்டாக இருக்குமாம். ஆனால், இந்த முறை தீபாவளிக்கு 212.27 மில்லியன் யூனிட் மட்டுமே செலவானதாம்.
விடுமுறை நாட்கள்: ஆக, வடகிழக்கு பருவமழை காலமும், அடுத்தடுத்த விடுமுறை நாட்களும் சேர்ந்து, மின் தேவையை வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், அடுத்த சில மாதங்களில் தொடங்கவிருக்கும் கோடை காலத்தில், தடையற்ற மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசுக்கு எந்தவித சிக்கலும் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுபோக, பண்டிகை காலம் என்பதால் பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது அதேபோல, பொதுமக்களும் மழை காரணமாக வீடுகளில் முடங்கி உள்ளனர்.. இதனால், ஏசி போன்ற மின்தேவைகள் அவ்வளவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் நம்பப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications