சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் சொன்ன அல்டிமேட்.. அதென்ன அலையாத்தி காடுகள்..புருவத்தை உயர்த்த வைக்கும் "கோவளம்"
சென்னை: தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, அலையாத்தி காடுகள் வளர்ப்பு பணிகள் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். என்ன அது?
நம்முடைய நாட்டில் சுமார் 4,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு, அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இவற்றில் 66 சதவீதம், மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளிலும், குஜராத் காடுகளிலும் உள்ளன.
அலையாத்தி காடுகளை, ஆங்கிலத்தில் "மாங்குரோவ் காடுகள்" என்பார்கள்.. இந்த அலையாத்தி காடுகளை, சதுப்புநிலக் காடுகள் என்றும் சொல்வார்கள்..

நம்முடைய தமிழகத்தில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை, சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் அலையாத்தி காடுகள் உள்ளன. இதில் பிச்சாவரத்தை விட சுமார், 10 மடங்கு பெரியது முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக் காடுகள்தான்.. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோமீட்டர் ஆகும்.
பெயர் விளக்கம்: அலையாத்தி காடுகள் கடலின் முகத்துவாரங்களில் அமைந்திருப்பவை.. இந்த காடுகளானது, சுமார் 60 வகையான மரங்களால் ஆனவை என்று சொல்லப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அலையாத்தி காடுகள், 12 வகையான மரங்களைக் கொண்டு அமைந்துள்ளன. கடலில் இருந்து வரும் அலையின் சீற்றத்தை தடுத்து ஆற்றுப்படுத்தும் தன்மை இந்த மரங்களுக்கு இருப்பதே இதன் ஸ்பெஷலாம்.. "அலை + ஆற்று + மரங்கள் = அலையாத்தி மரங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
இந்த அலையாத்தி காடுகள் உள்ள பகுதிதான், அரிய வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்கி கொண்டிருக்கின்றன.. சுனாமிக்கு பிறகுதான், அலையாத்தி காடுகளை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது... அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள், மணலை இறுகச்செய்து, கடல் சீற்றம் ஏற்படும் வேளையில் மண் அரிப்பு ஏற்படாமலும் தடுக்கிறது.
அதாவது, 80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு என்கிறார்கள். அதனால்தான், கடற்கரையில், சூழல் பாதுகாப்பு, புயல் சீற்றத்தை தடுப்பதில் அலையாத்தி காடுகள் மிக முக்கிய பங்காற்றுவதால், தமிழகத்தில் கடலோரங்கள், கழிமுக பகுதிகளில் உவர் நிலங்களில் அலையாத்தி காடுகள் வளர்ப்பதில் உள்ளூர் மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய, வனத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மிஷ்டி இயக்கம்: இதன் ஒருபகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கழிமுகப்பகுதியில், மத்திய அரசின், "மிஷ்டி" இயக்கம், தமிழக ஈர நில இயக்கம் சார்பில் அடுத்தக்கட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல், கால நிலை மாற்ற துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், அலையாத்தி காடுகள் வளர்ப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார். இதன் அடையாளமாக, அலையாத்தி மரக்கன்றையும் நட்டார்.. தன்னார்வலர்கள், மாணவர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும். இந்த அலையாத்தி காடுகள் வளர்ப்பு பணிகளை பார்வையிட்து, அவைகளை வெகுவாக பாராட்டினார்..
சுப்ரியா சாஹூ: தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, அலையாத்தி காடுகள் வளர்ப்பு பணிகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து சுப்ரியா சாஹூ பேசும்போது, தமிழகத்தின் கடற்கரை உவர் நிலங்களில் அலையாத்தி காடுகள் மிஷ்டி இயக்கம் மற்றும் ஈரநில இயக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிக அளவு பரப்பளவில் அலையாத்தி காடு மரக்கன்றுகள் நடப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்... இதனால் கார்பன் சமநிலையை ஏற்படுத்த முடியும்.. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என்று பெருமிதம் தெரிவித்தார் சுப்ரியா சாகு ஐஏஎஸ்.
பெரிய பிளான்: இந்த நிகழ்ச்சி குறித்து அதிகாரிகள் சொல்லும்போது, இந்தியாவில் 5,000 சதுர கிமீ பரப்பளவுக்கு அலையாத்தி காடுகள் உள்ளன. மிஷ்டி இயக்கம் வாயிலாக, இப்போதைக்கு 9 மாநிலங்களில், 540 சதுர கிமீ., பரப்பளவுக்கு அலையாத்தி காடுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 39 சதுர கி.மீ., பரப்பளவுக்கு அலையாத்தி காடுகள் இந்த இயக்கம் வாயிலாக வளர்க்கப்படடும் திட்டம் உள்ளது" என்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications