மாலையில் மீட்டிங்.. காலையில் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த இபிஎஸ்.. திடீர்ன்னு ஏன் இப்படி? என்னாச்சு
சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்கும் விழாவிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. 159 இடங்களில் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகவும், 33 திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஏன்
இந்த பதவி ஏற்பு விழாவில் அதிமுக சார்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். சிரித்த முகத்தோடு பதவி ஏற்பு விழாவிற்கு ஓ. பன்னீர்செல்வம் வந்திருந்தார். திமுக தலைவர்களிடம் சகஜமாக பேசி, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து, ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால்?
ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை கூட இவர் ஆளுநரை சந்தித்து நேரில் அளிக்கவில்லை. மாறாக சேலத்தில் இருந்து கடிதம் மூலமாகவே எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தார்.

பதவி ஏற்பு
தற்போது பதவி ஏற்பு விழாவிற்கும் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. எடப்பாடி பழனிசாமி வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விழாவை புறக்கணித்துள்ளார். இன்று மாலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. சென்னை அதிமுக அலுவலகத்தில் இந்த மீட்டிங் நடக்க உள்ளது.

கலந்து கொள்வார்
இந்த மீட்டிங்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கிறார். இப்படி இருக்கும் போது காலையில் முதல்வர் ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில் எடப்பாடி ஆப்சண்ட் ஆகி இருக்கிறார். இவர் ஏன் பதவி ஏற்பு விழாவிற்கு வரவில்லை, எதனால் விழாவை புறக்கணித்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை.. ஆனால் தேர்தல் தோல்விக்கு பின் எடப்பாடி பழனிசாமி வெளியே எங்கும் செல்லவில்லை, பொது இடங்களுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications