வாயை கொடுத்து மாட்டி கொண்ட அண்ணாமலை.. "நிரூபிங்க.. 1 கோடி தர்றோம்".. விவசாயிகள் அதிரடி சவால்!
அண்ணாமலைக்கு நேரடியாக சவால் விட்டுள்ளனர் தமிழக விவசாயிகள்
சென்னை: "விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அண்ணாமலை நிரூபித்து விட்டால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்று தமிழக விவசாயிகள் அண்ணாமலைக்கு நேரடியாக சவால் விட்டு அறிவித்துள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, பிறகு தடாலடியாக அதை ராஜினாமா செய்தவர் அண்ணாமலை.. ரஜினி பக்கம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்து பரபரப்பை கூட்டியவர்.

இவர் சேர்ந்த அடுத்த தினங்களிலேயே தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி கிடைத்தது.. இது அக்கட்சியில் உள்ள சீனியர்களே கொஞ்சம் ஷாக் தந்தது... இதைதவிர அவரை மாநிலங்களவை எம்பி ஆக நியமனம் செயய்பப்பட உள்ளதாகவும் ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
விரைவில் தமிழகத்தில் தேர்தல் வர உள்ளநிலையில், பாஜகவை வளர்ப்பதற்காக அண்ணாமலை தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.. அதனடிப்படையில் விவசாயிகளிடமும் நேரடியாக அவர் உரையாற்றி வருகிறார்.. ஒருமுறை பேசியபோது, விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.
இதற்குதான் விவசாயிகள் அண்ணாமலைக்கு சேலஞ்ச் செய்துள்ளனர்.. விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விவசாயிகளிடம் அண்ணாமலை நிரூபித்து விட்டால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேரடியாகவே சவால் விடுத்துள்ளனர்.
விவசாயிகள் இப்படி ஒரு சவாலை இதற்கு முன்பு விடுத்ததே இல்லை.. ஐஏஎஸ் படித்த, அதுவும் பாஜக துணை தலைவரிடமே சவாலை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை கூட்டி உள்ளது.. இந்த சவாலை அண்ணாமலை வென்றுவிட்டால், விவசாயிகளின் வாக்குகள் நிச்சயம் பாஜக பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது.. ஒருவேளை சவாலை நிரூபிக்க தவறினால், இருக்கிற நோட்டாவும் காலியாக வாய்ப்பு உள்ளது!
-
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார்












Click it and Unblock the Notifications