எது குறைவான நிதியா..? அதிமுக எம்.எல்.ஏ கேட்டதுமே பொங்கி எழுந்த பிடிஆர்.. லிஸ்ட் போட்டு விளக்கம்!
சென்னை : தமிழ்நாடு அரசின் எந்த துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அதிமுக எம்.எல்.ஏ ரவி, சில துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கியிருப்பதாக குற்றம்சாட்டினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எந்தத் துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவாக நிதி ஒதுக்கப்படவில்லை என விளக்கினார்.

சட்டமன்ற கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி 2023 -24ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதேபோல், 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்கியது. முன்னதாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நுறைவேற்றப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ சு.ரவி, வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் அமைந்திருக்கிறது. வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை எனச் சொல்வதை விட மானிய கோரிக்கையின் போது வழங்கப்படும் கொள்கை விளக்க குறிப்பு புத்தகம் எனச் சொல்லலாம். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது எனப் பேசினார்.

நிர்வாக மாற்றம்
அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "ஊரக வளர்ச்சித் துறையில் செயல்பட்டு வந்த ஜல் ஜீவன் மிஷன் நிர்வாக காரணங்களுக்காக மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டதால் 3 ஆயிரம் கோடி ரூபாய் இத்துறையில் இருந்து மற்றொரு துறைக்குச் சென்றது. அது நிர்வாக ரீதியான மாற்றம். அதன்படி பார்த்தால் 2023-24 நிதிநிலை அறிக்கையில் 9.4% கடந்தாண்டை விட அதிகமாகவே ஊரக வளர்ச்சித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

எந்த துறைக்கும்
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இந்த ஆண்டு முதல் மத்திய அரசே நேரடியாக வழங்குவதால் 893 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைவாக வந்திருக்கிறது. அந்தப் பணம் இதில் சேர்ந்திருந்தால் இந்த ஆண்டு 4,352 கோடியாக இருந்திருக்கும், இது சென்ற ஆண்டை விட ஆதிதிராவிடர் நலத்துறையில் 70 கோடி ரூபாய் கூடுதல். எனவே எந்தத் துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவான தொகை ஒதுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications