தமிழகத்தில் பெட்ரோலின் விலை ரூ 3 குறைப்பு.. நள்ளிரவு முதல் அமல்.. தமிழக நிதி துறை செயலர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை ரூ 100 ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனத்தை நம்பியிருக்கும் ஏழை, நடுத்தர மக்கள் இந்த விலையேற்றத்தால் அவதியடைந்தனர்.
அது போல் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே சென்றதால் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர். இதனிடையே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து கொண்டே வந்தது.

பெட்ரோல் விலை குறைப்பு
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கைகளை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன.

திமுக தேர்தல் அறிக்கை
அதில் திமுக தேர்தல் அறிக்கையில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோலி விலை லிட்டருக்கு ரூ 5, டீசல் விலை ரூ 3 குறைக்கப்படும். சமையல் எரிவாயுக்கான மானியம் ரூ 100 வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. கொரோனாவால் வீட்டு பொருளாதாரம் நலிவடைந்து பெட்ரோல் டீசல் விலை ஏறினாலும் வயிற்றையும் வாயையும் கட்டி கொண்டு குடும்பத்தினர் குழந்தை குட்டிகளுக்காக வேலை செல்லும் நிலையில் இருந்த வாகன ஓட்டிகளுக்கு இந்த அறிவிப்பானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக ஆட்சி பொறுப்பேற்பு
இதையடுத்து திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ 4000, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் பெட்ரோல் , டீசல் விலை குறைப்பு குறித்து அரசு எதையும் செயல்படுத்தவில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இதையடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பெட்ரோல் டீசல் மீதான வரியில் ஒன்றிய அரசு அதிக பங்கை எடுத்துக் கொள்கிறது. எனவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தற்போது சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தின.

ஸ்டாலின் தலைமையில் முதல் பட்ஜெட்
இந்த நிலையில் தமிழகத்தின் 2021- 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பட்ஜெட் மீதான உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இரு சக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது.

பெட்ரோல் மீதான வரி குறைப்பு
தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரியை ரூ 3 குறைக்கிறது. நிதிச் சுமை இருந்தாலும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக குறைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதால் விலை குறைப்பு செய்கிறோம் என்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இதுகுறித்து தமிழக நிதி துறை செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில் இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைகிறது என அறிவித்தார்.

இரட்டை இலக்கத்தில் பெட்ரோல் விலை
இதன் மூலம் இனி தமிழகத்தில் பெட்ரோலின் விலை இரட்டை இலக்கத்தில் இருக்கும். அது போல் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெட்ரோல் விலை 100-க்கு கீழ் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஆனால் டீசல் விலை குறைப்பு குறித்து அரசு எதையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். மேலும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 5 குறைப்பதாக கூறிய திமுக, தற்போது வெறும் ரூ 3 குறைப்பதாக அறிவிப்பது ஏமாற்று வேலை என எதிர்க்கட்சியான அதிமுக விமர்சனம் செய்துள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications