மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்கள் கைது
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பாம்பனில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் உள்பட 14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால், மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவங்களும், அபராதம் விதிக்கப்படுவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதும், மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும்போதும், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில், பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காகச் சென்ற 10 மீனவர்கள் உள்பட 14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழக மீனவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக புத்தளம் கடற்படை முகாமிற்கு மீனவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications