அரசு பள்ளி மாணவர்களே! எம்பிபிஎஸ் படிக்கணுமா?, ஐஐடி சேரணுமா?.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களின் போது மாலை வேளையில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு நீட், ஜேஇஇ பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கு நீட் எனும் நுழைவு தேர்வில் வெற்றியடைந்திருக்க வேண்டும். அது போல் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜேஇஇ எனும் பயிற்சி தேவைப்படுகிறது.

பெரும்பாலான மாணவர்களுக்கு மருத்துவ கனவு என்பது நீட் தேர்வுக்கு பிறகு கானல் நீராகிவிட்டது. அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கென பயிற்சி மையங்கள் இந்தியா முழுவதும் முளைத்துள்ளன. இவைகளில் எல்லாம் பல லட்சங்களை செலவு செய்து படிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
இது போல் பல லட்சங்களை செலவு செய்வோர் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள், மருத்துவ படிப்பில் சேருகிறார்கள். ஆனால் தானாக படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களும் வெற்றியடைகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நீட் தேர்வால் பல அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

அரசுபள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை வாரந்தோறும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் வாரத்தில் 5 நாட்களும் நீட், ஜேஇஇ பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications