தமிழக அரசு யோகா மருத்துவர்களை கொண்டு வெளிநாட்டு செஸ் வீரர்களுக்கு ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் தெரபி!
சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சிகளை அளித்தனர்.
சென்னை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மொத்தமாக 11 சுற்றுகளாக நடைபெறுகின்றன. அதன்படி இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நாளொன்று 1 சுற்று வீதம் நடைபெறுகிறது.
தினமும் மதியம் 3 மணிக்கு இந்த போட்டிகள் தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஓய்வு தினம் ஆகும். இந்த 189 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இந்தியா சார்பில் 30 பேர் 6 குழுக்களாக பங்கேற்கிறார்கள்.

போட்டி
இந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற வீரர்களும் வீராங்கனைகளும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். இவர்கள் தங்கும் இடம் முதல் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருப்பதாக வெளிநாட்டு வீரர்களே பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இனி இந்த சர்வதேச போட்டிகள் தமிழகத்தில்தான் நடத்த வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தமிழக அரசின் ஏற்பாடுகள் நன்றாக உள்ளது. 10-ஆம்தேதி வரை இவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

உணவுகள்
3500 க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன. ஆசியா முதல் இத்தாலி வரை அனைத்து நாட்டு உணவுகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அது போல் வெளிநாட்டினருக்கு இந்த உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தினால் உடனே சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியான பாஜக பாராட்டும் அளவுக்கு இந்த ஏற்பாடுகள் உள்ளன. நேற்றைய விழாவில் பிரதமர் மோடி ஒரு முக்கிய விஷயத்தை கூறியிருந்தார். அதாவது வென்றவர், தோற்றவர் என யாரும் இல்லை. இன்றைய வெற்றியாளர், நாளைய வெற்றியாளர் என்பதுதான் உண்மை என்றார்.

விளையாட்டு
அது போல் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டாலும் வீரர்கள், வீராங்கனைகள் இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என கருதுகிறார்கள். அது போல் இந்திய வீரர்களோ நம் மண்ணில் வெளிநாட்டு வீரர்களை வென்று தங்க பதக்கத்தை வெல்ல வேண்டும் என துடிக்கிறார்கள். இதனால் அனைத்து வீரர், வீராங்கனைகளும் வெற்றி என்ற ஒரு இலக்கை மனதில் வைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்.
Recommended Video

வெற்றிக்காக வீரர்கள்
இவ்வாறு போட்டியின் வெற்றிக்காக வீரர்கள் பாடுபடுவதால் அவர்கள் மனதளவில் உளைச்சலுக்குள்ளாவார்கள் என்பதை அறிந்த தமிழக அரசு, அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்கள் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் உள்ள யோகா ஹால்களில் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

ஸ்ட்ரெஸ் தெரபி
இந்த பயிற்சி மூலம் மன அழுத்தம் குறைந்து, விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். மூளையை பயன்படுத்தி விளையாடப்படும் விளையாட்டு என்பதால் மனதில் எந்த வித அழுத்தமும் இல்லாதிருத்தல் முக்கியமானதாகும். இந்த தெரபிகளை மருத்துவர்கள் சொல்லிக் கொடுக்கும் போது வீரர்கள் உற்சாகமாக கற்றுக் கொள்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பயிற்சியின் பயன்கள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிகிறார்கள். இதனால் மருத்துவர்களும் உற்சாகத்துடன் யோகா கலை குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் மருந்து மாத்திரை இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்தும் விவரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications