கரூரில் மீட்பு பணிகள் எவ்வளவு நேரம் நடந்தது? அமுதா ஐஏஎஸ் விளக்கம்
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்தது குறித்து தவெகவினர் தவறான தகவலை பரப்பி வரும் நிலையில் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கியுள்ளார். அப்போது அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் வந்தது ஏன், மின்சாரம் அங்கு நிறுத்தப்பட்டதா, அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அமுதா ஐஏஎஸ், ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், சுகாதாரத் துறை செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பதில் அளித்தனர்.

அமுதா ஐஏஎஸ் கூறுகையில், தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப்பாலமும் பெட்ரோல் பங்கும் உள்ளது. இரண்டாவதாக உழவர் சந்தை இடத்தை கேட்டார்கள். அந்த இடத்தில் 5 ஆயிரம் பேர்தான் திரள முடியும் என்பதால் வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது.
மேலும் தவெக கூட்டத்தில் மின்சாரம்த துண்டிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். தவெகவினர் அங்கிருந்த ஜென்செட் கொட்டகைக்குள் புகுந்தனர். அப்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அமைப்பாளர்களே ஜெனரேட்டரை ஆஃப் செய்ததால் ஃபோகஸ் லைட் ஆஃப் ஆனது.
அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் லைட் எரிவதை பாருங்கள். எனவே விஜய் பேசும் போது மின் இணைப்பும் துண்டிக்கப்படவில்லை. அது போல் ஆம்புலன்ஸ் நுழைந்தது குறித்து கேட்கிறார்கள்.
தவெக சார்பில் 7 ஆம்புலன்ஸ்கள் இருந்தன. 108 ஆம்புலன்ஸ் 6 இருந்தது. இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்தும் சந்தேகம் எழுப்புகிறார்கள். இதுகுறித்து செந்தில் குமார் சொல்வார் என கூறினார் அமுதா. அப்போது அவர் கூறுகையில், "மக்கள் உறவினர்களின் உயிர்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் உடல் கிடைப்பதிலும் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவர்களை வைத்து விரைந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது" என செந்தில் குமார் தெரிவித்தார்.
அது போல் அமுதா தொடர்கையில் அங்கு நிறைய பேர் மயங்கி விழுகிறார்கள் என்றவுடன் உடனே போலீஸார் வாக்கிடாக்கி மூலம் ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் கொடுத்து அவற்றை வரவழைத்தனர். இரவு 7.17 முதல் இரவு 9.45 மணி வரை மீட்புப் பணி நடந்தது என அமுதா ஐஏஎஸ் தெரிவித்தார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications