மாற்றத்தை சந்திக்க போகும் நகராட்சிகள்.. எண்ணிக்கை கூடப்போகுது.. குஷியில் முன்னாள் கவுன்சிலர்கள்!
சென்னை: மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் வார்டு வரையறை செய்வது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார். சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் ரா.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு இந்த பதில் அளித்தார் அமைச்சர் .
தமிழக சட்டப்பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் ரா.ராஜேந்திரன், "சேலம், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியானது. தற்போது 60 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில்,வார்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும்" என்றார்.
அதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "சேலம் மாநகராட்சியில் வார்டு வரையறை முடிக்கப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. சேலம் மாநகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கைகள் வந்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேலம் மாநகராட்சியில் 8 லட்சத்து 29,267 பேர் உள்ளனர். தற்போது 2021-ம் ஆண்டு கணக்கின்படி, 9 லட்சத்து 52 ஆயிரமாக மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

வார்டு வரையறை கோரிக்கை
சேலம் மாநகராட்சி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளது. எனவே, மக்கள் தொகை பெருக்கம், வந்த கோரிக்கைகள் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் வார்டு மறுவரையறை செய்வது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது.

52 வார்டுகள்
இப்போது, மாநகராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் வார்டு எண்ணிக்கை அளவு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மக்கள் தொகை எண்ணிக்கை 3 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 52 வார்டுகள் இருக்கலாம். 3 முதல் 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 58 வார்டுகள் இருக்கலாம்.

100 வார்டுகள்
4.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை - 63 வார்டுகளும் , 6 முதல் 8 லட்சம்வரை- 69 வார்டுகளும் , 8 முதல் 10 லட்சம் வரை - 75 வார்டுகளும், 10 முதல் 15 லட்சம் வரை - 88 வார்டுகளும் ,15 முதல் 20 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் - 100 வார்டுகளும் இருக்கலாம். 20 முதல் 30 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் 121 வார்டுகள் இருக்கலாம்.

200 வார்டுகள்
30 முதல் 40 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால்- 142 வார்டுகளும் , 40 முதல் 50 லட்சம் வரை இருந்தால் 161 வார்டுகளும், 50 முதல் 60 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் - 180 வார்டுகளும், 60 லட்சத்துக்கு மேல் 200 வார்டுகளும் இருக்கலாம் என்ற வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. வந்துள்ள கோரிக்கை அடிப்படையில் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications