அரசு ஊழியர்கள் போராட்டம்.. பொதுமக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை.. கசப்பான பாடம்
சென்னை: 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பது போல், தேர்தல் நெருங்குவதால் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தீவிரப்படுத்துவார்கள். இது இப்போது மட்டுமல்ல... எல்லா தேர்தல் காலத்திலும் நடப்பதுதான். குறிப்பாக சட்டசபை தேர்தல் நெருங்கும் போது, அரசு ஊழியர்கள் போராடுவது வழக்கமாக உள்ளது. அப்போதுதான் அவர்களின் கோரிக்கையும் ஏற்கப்படுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. தற்போது ஓய்வூதிய அறிவிப்பு மட்டும் போதாது என்று தங்கள் கோரிக்கைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் தேதி அனேகமாக அடுத்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதம் கண்டிப்பாக அறிவிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு அரசே நினைத்தாலும் நிதி தொடர்பான எந்தஅறிவிப்பும் வெளியிட முடியாது. ஏற்கனவே உள்ள திட்டங்களை மட்டுமே செயல்படுத்த முடியும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிலும் இடைக்கால பட்ஜெட்தான் போட முடியும். முழு பட்ஜெட் என்பது இந்த ஆண்டு ஜூலையில் தான் தாக்கல்செய்யப்படும். அதாவது புதிய அரசு தான் தாக்கல் செய்யவே முடியும்.

எனவே தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்க அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அவர்களின் போராட்டங்கள் தங்கள் தேவைகளுக்காகவே என்றாலும், போராட்டங்களில் நியாயங்கள் இல்லாமல் இல்லை.. தேர்தலின் போது அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்று தான் போராடுகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்காக சொல்லும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பித்தான் வாக்களிக்கிறார்கள். ஆனால் ஆட்சி முடியும் வரை நிறைவேற்றப்பவில்லை என்றால், அதனை ஏமாற்றமாக கருதும் அரசு ஊழியர்கள் இறுதியாக போராடுகிறார்கள்,
அவர்களுடைய போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமல் இல்லை.. அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. எதார்த்தங்களை கூறுகிறது. ஏனெனில் கேட்கும் கோரிக்கைகள் எல்லாமே நிதி தொடர்பானது. அரசின் கஜானாவில் இருந்தால் தான் செய்ய முடியும். தமிழக அரசிடம் அதற்கு உரிய பணம் இல்லை என்றால், நிறைவேற்ற முடியாது என்று தான் கூறும். இதுவே எதார்த்தம்..
ஏனெனில் இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.3 லட்சத்து 31 ஆயிரம் கோடி. ஆனால் செலவு ரூ.3 லட்சத்து 72 ஆயிரம் கோடி. அதாவது பற்றாக்குறை மட்டும் ரூ.41 ஆயிரம் கோடியாகும். இந்த பற்றாக்குறை ஒருபுறம் எனில், பட்ஜெட்டில் கணிசமான பணம் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டுமே செல்கிறது. தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, வாங்கிய கடன்களுக்காக வட்டி மட்டும் செலுத்த சுமார் ₹70,753.99 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகம் ஆகும். மார்ச் 31, 2026 நிலவரப்படி, தமிழகத்தின் மொத்தக் கடன் சுமார் 9.30 லட்சம் கோடி ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.07% ஆகும்.
இதில் அரசே நினைத்தாலும் குறைக்கவே முடியாத செலவு என சில கட்டாயச் செலவுகள் உள்ளன. 2025-26-ல் இவை மொத்தம் ₹2,07,054 கோடி ஆக இருக்கிறது, இதில் முன்பே சொன்னது போல் வட்டிக்கு மட்டும் ₹70,754 கோடி (கிட்டத்தட்ட 34%) போய்விடும். அரசு ஊழியர்கள் சம்பளம் ₹91,726 கோடியாகும்.இதுதவிர அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு ₹46,214 கோடி போய்விடுகிறது. வருவாய் பற்றாக்குறை என்பது ₹41,635 கோடியாக இருக்கிறது.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்த பட்ஜெட்டில் சம்பளம், வட்டி போக அரசிடம் "கைவசம்" என்று உபரிப் பணம் என்று அரசிடம் ஒரு ரூபாய் கூட கிடையாது. மாறாக, சுமார் ₹1,06,968 கோடி அளவிற்குப் புதிய கடன்களை வாங்கித்தான் அரசு தனது அனைத்துத் திட்டங்களையும் 2025-26-ல் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி கடன் வாங்குவதால் தமிழகத்தின் மொத்தக் கடன் 9.30 லட்சம் கோடியை தொட்டுள்ளது.
இந்த சூழலில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியம் தொடர்பாக அடுத்த நிதியாண்டில் 11000 கோடி கூடுதலாக ஒதுக்க வேண்டும். அதற்கும் சேர்த்து அரசு கடன் வாங்க வேண்டும். இப்படியான சூழலில் அரசு எந்த புதிய அறிவிப்பு வெளியிட்டாலும் அதற்கு கடன்தான் வாங்க வேண்டும். பின்னர் இந்த கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அதனால் கட்டமைப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியாது என்கிற நிலையே உள்ளது.
இதனால் அரசு இடியாப்ப சிக்கலில் இருக்கிறது. ஏனெனில் அரசு அறிவித்த ஓய்வூதியம் திட்டத்தையே இன்னும் பாதி அரசு ஊழியர்கள் ஏற்கவில்லை. மறுபுறம் சம வேலைக்கு சம ஊதியம் என ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தூய்மை பணியாளர்கள் தனியார் மயமாக்குவதை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். ங
அதேபோல் அங்கன்வாடி பணியாளர்கள் கிராம செவிலியர் பணி வழங்கப்படும் என்ற அரசாணையை செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அதேபோல சத்துணவு பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடப்போவதாக அறிவித்துள்ளார்கள். போக்குவரத்து ஓய்வூதிய தொழிலாளர்களும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். ஏற்கனவே செவிலியர்களும் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
உண்மையில் இந்த சிக்கல்களுக்கு எல்லாம் காரணம் தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் வாக்குறுதிகள் தான். அரசால் நிறைவேற்ற முடியும் என்கிற வாக்குறுதிகளை மட்டுமே அளிக்க வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமற்ற, மக்களை சோம்பேறியாக்கும் திட்டங்களை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்அளிக்கவே கூடாது. அப்படி செய்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் என்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 14 லட்சம் கோடியை தாண்டிவிடும். வட்டி மட்டும் ₹1.10 லட்சம் கோடிக்கும் மேல் செல்லும். வாங்கும் பணத்தை அப்படியே வட்டிக்கே கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். வருமானம் உயராமல் எந்த அரசாக இருந்தாலும் அடுத்த ஐந்தாண்டுகளில் தாரளமாக செலவு செய்துவிட முடியாது என்பதே எதார்த்தம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications