கொரோனா பரவல்.. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள்.. அரசு பதில்
சென்னை: கொரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர்முபாரக் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் ..அந்த வழக்கில் கொரோனா பரவல் தொடர்பாக தப்லீக் ஜமாத் மாநாட்டை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.. அந்த மாநாட்டிற்கு பின்பும் பல கூட்டங்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தை ஒரு மத ரீதியாக மாற்றப்பட்டு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இரு சமூகங்களுக்கு இடையே பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மதப் பிரிவினையை ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பரப்புவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி தெரிவித்தது
மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் இந்த புகார் குறித்து சுமார் 94 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்
அப்போது நீதிபதிகள் இதை எழுத்துபூர்வமான பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18ம் தேதியன்று ஒத்திவைத்தனர்
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications