அரசு பள்ளிகளுக்கு அரசு போட்ட உத்தரவு! 100% கட்டாயம்.. தனியார் பள்ளிகளுக்கு டஃப் ஃபைட் கொடுக்க பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக, பள்ளிகள் திறந்த பின்னர் இரண்டு வார காலத்திற்கு பேரணி நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

'அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்' என்ற பெயரில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பேரணி நடத்த வேண்டும், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 100% மாணவர் சேர்க்கையை உறுதி செய்தல் வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

TN Government instructs teachers to conduct rally to increase admission in government schools

வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு முதல் 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வறுமை காரணமாக எந்தவொரு குழந்தையும் பள்ளி செல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இலவச மதிய உணவு, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, இலவச புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் மட்டுமல்லாது ஷூக்கள், சாக்ஸ்கள், காலணிகள், புத்தகப் பைகள், வண்ண பென்சில்கள், கிரையான்கள் ஆகியவையும் பள்ளி திறந்த சில நாட்களிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+