பழைய பைக் முதல் பஸ் வரை.. தமிழகத்தில் வாகன வரிகள் திடீர் உயர்வு.. பைக் வாகனத்துக்கும் வரி? ஹைலைட்ஸ்
சென்னை: மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளை உயர்த்துவதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் என்ன?
தமிழகத்தின் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை, சட்டசபையில் போக்குவரத்துத் துறை சிவசங்கர் தாக்கல் செய்தார்.
சரக்கு வாகனங்கள்: அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்படுகிறது.

பைக்குகள்: குறிப்பாக படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு 4,000 ரூபாய் வரை வரி உயர்த்தப்படுகிறது.புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி 12 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இதே போன்று, புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 2,250 ரூபாய் மற்ற வாகனங்களுக்கு 3,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அமைச்சர் தாக்கல் செய்த மசோதாவின் கூடுதல் ஹைலைட்ஸ் இதுதான்:
- 10 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வாகனங்கள், நான்கு முதல் ஏழு பேர் வரை சுற்றுலா செல்ல, தற்போது வசூலிக்கப்படும்.. 10 சதவீத வரி, 13 சதவீதமாக உயர்த்தப்படும்
- 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட, ஏழு பேர் வரை செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தற்போதுள்ள 15 சதவீத வரி, 18 சதவீதமாக உயரும். 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 20 சதவீதம் வரி வசூலிக்கப்படும்
- பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கு, ஒவ்வொரு இருக்கைக்கும் தற்போது, 50 ரூபாயாக உள்ள காலாண்டு வரி, 75 ரூபாயாகவும்; கல்லுாரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பயணிக்க, ஒவ்வொரு இருக்கைக்கும் இப்போதுள்ள வரி, 100 ரூபாயிலிருந்து 125 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த வாகனங்கள் மற்ற பணிக்காக செல்லும்போது, 'ஏசி' வாகனமாக இருந்தால், ஒவ்வொரு இருக்கைக்கும் தற்போதுள்ள 600 ரூபாய், 900 ரூபாயாகவும், 'ஏசி' அல்லாத வாகனங்களுக்கு, 500 ரூபாய் என்பது, 600 ரூபாயாகவும் உயர்த்தப்படும்
- புதிய இரு சக்கர வாகனம், 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், தற்போதுள்ள 8 சதவீத வரி, 10 சதவீதமாக உயரும். 1 லட்சம் ரூபாய்க்குள் மேல் உள்ள வாகனங்களுக்கு, தற்போதுள்ள 8 சதவீத வரி, 12 சதவீதமாக உயர்த்தப்படும்
- பழைய வாகனங்களுக்கு, அதன் வாழ்நாள் ஆண்டுக்கு ஏற்றார்போல், தற்போது 5 முதல் 7.50 சதவீதம் வரை வரி உள்ளது உள்ளது. இது, 10 சதவீதம் வரை உயர்த்தப்படும்..
- மேலும், சரக்கு வாகனங்களில் ஏற்றப்படும் எடைக்கேற்ப, வரி உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி வாகனங்களுக்கும் அதன் எடைக்கேற்ப வரி உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சிவசங்கர் இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது.. மேலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கோரினர். இருந்தாலும், பெரும்பான்மை ஆதரவோடு மசோதா நிறைவேறியது.
வரிஉயர்வு: இந்த வரிஉயர்வு குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் சொல்லும்போது, வாழ்நாள் வரி உயர்த்தப்பட்டிருப்பதால் வாகன விலையில் 5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.. அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் ஜிஎஸ்டிசேர்த்து ரூ.7,000 முதல் ரூ.8,000 கூடுதலாக செலவழிக்க வேண்டிவரும்..
அதேபோல, ரூ.5 லட்சம் வரையிலான கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல்ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமான கார்களுக்கு 20 சதவீதமும் விதிக்கப்படுவதால், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் கூடுதல் செலவு ஏற்படும் என்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications