இன்றே கடைசி? அவசர அவசரமாக டெல்லிக்கு கடிதம் எழுதிய தமிழக அரசு.. விவசாயிகளுக்காக முக்கிய கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு தற்போதுதான் தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 15ஆம் தேதி, அதாவது இன்றுடன் நிறைவடைகிறது. தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 60 சதவிகிதம் வரையிலான விவசாயிகள் மட்டுமே தற்போது வரை பயிர் காப்பீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவிக்கின்றனர்.
இதனால் தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க கோரி அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கத்தினர் என பலரும் வலியுறுத்தினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர், கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் "அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவடையவுள்ளது. பருவமழை தாமதம், காவிரியில் போதிய நீர் திறக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பயிர் நடவு தாமதமாகியுள்ளது.
பண்டிகை கால தொடர் விடுமுறையால் விவசாயிகளால் பயிர்க்
காப்பீடு செய்ய முடியவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" என்று தமிழ்நாடு வேளாண் ஆணையர் எல்.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
-
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications