கொட்டும் பணம்.. தமிழ்நாடு சார்பதிவாளர்களுக்கு செக் வைத்த அரசு! சொத்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆர்டர்
சென்னை: தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறையில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள் மாவட்ட பதிவாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் ஜூலை 25 ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பத்திரப்பதிவுக்கு ஆயிரம் தொடங்கி கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் சார்பதிவாளர் அலுவலங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டன. சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில்தான் பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் சொத்து அறிக்கை ஜூலை 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டு இருக்கும் உத்தரவில், “17.07.2023 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் W.P. Nos.2711 & 2719 of 2019 & 3177 of 2020 and W.M.P.No.3683 of 2020 Dated 17.07.2023 என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜரான போது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரிபார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை 17.07.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.
அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 7(3)ல் அரசு பணியாளர் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உட்பிரிவு 7(3)(a)ல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
"தமக்கு முன்னோர் வழியாக கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள அசையாச் சொத்து"
சார்பதிவாளர். அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்கள், குடும்ப உறுப்பினர்கள்(தாய், தந்தை, சகோதரர், சகோதரி, கணவர்/மனைவி, மகன், மகள் மற்றும் கணவர்/மனைவி-ன் தாய் தந்தை மற்றும் சகோதரர் சகோதரி) மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோரது சொத்து அறிக்கையை ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண்(PAN) இணைத்து ஒரு வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர்கள் /துணைப் பதிவுத் துறை தலைவர்கள் / பதிவுத்துறை தலைவரிடம் 25.07.2023 க்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications