குஷியில் பள்ளி மாணவர்கள்.. இன்று முதல் 4 நாட்கள் லீவு.. அதைவிடுங்க.. சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸாமே
சென்னை: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஆயுதபூஜை இந்த வருடம் வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமையாக வருகிறது.. அதேபோல, விஜயதசமி மறுநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், இந்தமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு என மொத்தமாக 4 நாட்கள் அரசு விடுமுறை வருகின்றன.. அதனால், சென்னையில் தங்கி வேலைபார்ப்பவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி: பலரும், ஊட்டி, கொடைக்கானல், போன்ற குளிர்பிரதேசங்களும், திருச்செந்தூர் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, பழனி போன்ற ஆன்மீக தலங்களுக்கும் செல்ல ஆயத்தமாகிவருகிறார்கள். ஆனால், ரெயில்களில் டிக்கெட் புக்கிங் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது. அரசு பஸ்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளிவிடும். அதனால்தான், நேற்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
தொடர் விடுமுறையையொட்டி தமிழக பள்ளிகளுக்கும் இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சமீபத்தில்தான் காலாண்டு தேர்வுக்கான விடுமுறை 5 முதல் 11 நாட்கள் வரை விடப்பட்டிருந்தது. அதனால், துர்கா பூஜைக்கான பண்டிகைக்கு, பெரும்பாலும் 3 முதல் 4 நாட்கள் தான் விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியபடியே இருந்தது.
விடுமுறை: இந்நிலையில், 4 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பண்டிகைகள் முடிந்தநிலையில், மறுபடியும் வரும், 25ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அதேநேரம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதை தொடர்ந்து, 25 முதல், 27ம் தேதி வரை, 9, மற்றும் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படஉள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications