Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இலவச லேப்டாப் திட்டத்துக்கு 2 நிறுவனங்கள் தேர்வு! புதிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்திற்காக குறைந்த தொகை சமர்ப்பித்த 2 நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மடிக்கணினிக்கு ரூ.40,828 விலையுடன் (15.6 இன்ச் திரை) டெல் நிறுவனமும், ரூ.23,385 விலையுடன் (14 இன்ச் திரை) ஏசர் நிறுவனமும் ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பித்தன.

TN Government Selects Two Lowest Bidders for Free Laptop Scheme to College Students

இலவச லேப்டாப்

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் தருவாயில் மடிக்கணினி வழங்கப்பட்டது. கொரோனா பரவல் காலகட்டத்தில் இந்தத் திட்டம் முடங்கியது. இந்நிலையில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், திமுக அரசால் மீண்டும் செயல்படுத்தப்பட இருக்கிறது.

2025-26 நிதியாண்டில், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மே மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இந்த நிதியாண்டில் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியது.

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்

கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் தரப்போகிறோம் என அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவித்திருந்தார். தமிழக அரசின் இந்த திட்டத்தின் நோக்கமாக இருப்பது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தொழில்நுட்ப அறிவையும் தரமான கல்வி வசதிகளையும் வழங்குவதுதான்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை, பொறியியல், அறிவியல், வேளாண்மை, மருத்துவம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்கள், இந்த திட்டத்தில் லேப்டாப் பெற தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக 20 லட்சம் லேட்பாப்களை வாங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியது.

டெண்டர்

கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியது. அரசின் இந்த டெண்டரை கைப்பற்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய நிலையில், டெல், ஏசர் ஆகிய நிறுவனங்கள் குறைந்த தொகைக்கான டெண்டர் கோரியுள்ளன.

இந்த டெண்டரில், டெல், ஏசர் மற்றும் ஹெச்.பி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்கள் அரசிடம், தங்களின் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன. அதன்படி, 15.6 இன்ச் திரை கொண்ட மடிக்கணினிக்கு டெல் நிறுவனம் வரிகள் இல்லாமல் 40,828 ரூபாய் விலையாக சமர்ப்பித்துள்ளது. அதேபோல, 14 இன்ச் திரை கொண்ட மடிக்கணினிக்கு ஏசர் நிறுவனம் வரிகள் இல்லாமல் 23,385 ரூபாய் விலையாக சமர்ப்பித்துள்ளது.

விரைவில் மாணவர்களுக்கு கிடைக்கும்

ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு ஆணை வழங்கப்படும். அடுத்த, 30 - 45 நாட்களுக்குள் கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு கொடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, அக்டோபர் மாதவாக்கில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+