இன்று ரூ 105-க்கு 10 காய்கறிகள்.. அவசரப்பட்டுட்டோமே!.. நேத்து தக்காளி மட்டும் ரூ 50க்கு வாங்கினோமே!
சென்னை: 10 காய்கறிகள் கொண்ட தொகுப்பு ஒன்றின் விலை ரூ 105 க்கு கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அதிக விலை கொடுத்து காய் வாங்கிய மக்கள் கவலையில் உள்ளார்கள்.
தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஒரு வார முழு ஊரடங்கில் காய்கறி, மளிகை கடை உள்ளிட்ட எந்த கடைகளும் திறந்திருக்காது. இதனால் மக்கள் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள நேற்றைய தினம் முழு தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இதனால் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் கூடியது. நேற்றைய தினம் காய்கறிகள் விலை மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன.

தோட்டக் கலைத் துறை
காய்கறிகள் தோட்டக் கலைத் துறை மற்றும் உள்ளாட்சிகளுடன் இணைந்து வீடுகளுக்கே நடமாடும் வாகனங்களில் விற்பனைக்கு வரும் என அரசு தெரிவித்தும் அதை நம்பாமல் நேற்றைய தினம் கடைகளில் மக்கள் கூட்டம் கூடியது.

அதிக விலை
நேற்று பெரும்பாலான கடைகளில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. ஒரு கிலோ பீன்ஸ் ரூ 290 க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் ஒன்றரை கிலோ தக்காளி ரூ 50க்கும் ஒன்றரை கிலோ வெங்காயம் ரூ 100க்கும் விற்பனையானது.

நடமாடும் கடைகள்
சின்னவெங்காயம் கிலோ ரூ 50க்கு விற்பனை செய்யப்பட்டது. முருங்கைக்காய், தேங்காயின் விலையும் எகிறியிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் கூட்டுறவுத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டி வீடுகளுக்கே வந்தது.

ரூ 105 க்கு விற்பனை
இதில் 10 காய்கறிகள் கொண்ட தொகுப்பின் விலை ரூ 105 க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த பொருட்களின் பட்டியல் இதோ.. வெங்காயம் கிலோ ரூ 30க்கும் தக்காளி கிலோ ரூ 15க்கும் என மொத்தம் 10 காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் நேற்றைய தினம் காய்கறிகளை வாங்கியவர்கள் கவலையில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications