அரசியலாக்கும் ஆளுநர்..கல்வி முறை, வெளிநாட்டு பயணம் பற்றி விமர்சிப்பதா? தங்கம் தென்னரசு கடும் தாக்கு
சென்னை: கொரோனா கால கட்டத்தில் கூட தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்வித்துறையில் சிறந்து விளங்குவதாகவும் இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்தும் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆளுநர் கூறிய கருத்துக்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் 'உயர் கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது' என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ரவி, அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
காலத்திற்கேற்ற கல்வி கிடைக்காததால் இளைஞர்களின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார். முதலீட்டாளர்களை கவரக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றார். வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள் என்றும் அவர்கள் கடுமையாக பேரம் பேசுபவர்கள் என்றும் கூறினார். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. திமுக தலைவர்களும் கூட்டணி கட்சித்தலைவர்களுக்கும் ஆளுநர் கூறிய கருத்துக்களுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, துணைவேந்தர்களை அழைத்து ஆளுநர் அரசியல் பேசியது ஏற்க முடியாது என்று கூறினார்.
ஆளுநர் ரவி அத்துமீறி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வியில் அதன் தரத்தில் குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்,கலை அறிவியல் கல்லூரிகளின் தரம் சிறப்பாக உள்ளது.

வெளிநாடு சென்று வந்தால் முதலீடு வந்து விடுமா என்று ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரதமர் மோடியும் வெளிநாட்டு பயணம் சென்று வந்துள்ளார். முதல்வர் மோடி அடிக்கடி வெளிநாட்டு பயணம் செல்வதை ஆளுநர் விமர்சனம் செய்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது பலமுறை வெளிநாட்டு பயணம் சென்று வந்துள்ளதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் கொரோனா காலத்தில் கூட அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வழக்கு தொடர எண்ணம் எதுவும் இல்லை என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications