கைகூப்பி வணங்கி முன்னாள் பிரதமர் நேருவுக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ரவி.. உடன் திமுக அமைச்சர்கள்!
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாளையொட்டி, தமிழக ஆளுநர், அமைச்சர்கள், நேரு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நேருவின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அனைத்து மாநிலங்களிலும் நேருவின் பிறந்தநாள் சிறப்பாகப் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் நேருவின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன், எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் நேருவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications