'புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள்..' துணை வேந்தர்கள் கூட்டத்தில் ஆளுநர் பேச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். அதில் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதால் அதைப் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த முன்வரவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்கலைக்கழங்களின் நிலை மற்றும் மாநில அரசு நிதி உதவி குறித்து ஆளுநரிடம் துணை வேந்தர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் பல்கலைக்கழகங்களின் சாதனைகள் குறித்தும் ஆளுநரிடம் விளக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு 20 பல்கலைக்கழகங்களைக் கொண்டிருப்பதைப் பாராட்டினார். மேலும், Gross Enrolment Ratio எனப்படும் கல்லூரி மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளதையும் அவர் பாராட்டினார். உயர்கல்வியில் திறப்பாக உள்ளதாகக் கல்வித் திறன் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துமாறு துணைவேந்தர்களை ஆளுநர் வலியுறுத்தினார். துணைவேந்தர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆளுநர், இதற்காகத் திறமையான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் துணைவேந்தர்களிடம் வலியுறுத்தினார். பேராசிரியர்கள் நியமனத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதால் அதைப் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த முன்வரவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், ஆளுநர் அதற்கு நேர்மாறாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications