“வெற்றிகரமான ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பார்.. ஆனால்..” - தனது மனைவியின் பேச்சை ஆமோதித்த ஆளுநர்!
ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநரின் மனைவி பேச்சை சிரித்தபடி ஆமோதித்துள்ளார் ஆளுநர் ரவி.
சென்னை : ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பாள். ஆனால் ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணின் பின்னாலும் ஒரு ஆண் இருப்பார் என்று கூற முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி ரவி பேசியுள்ளார். அவரது பேச்சை ஆளுநரும் ஆமோதித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் பெண் ஆளுமைகளுடன் 'எண்ணித்துணிக' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இதன் மூன்றாம் அமர்வு நேற்று சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த தமிழ்நாட்டின் முக்கியமான பெண் ஆளுமைகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ஆளுநரிடமும், அவரது மனைவி லட்சுமி ரவியிடமும் கலந்துரையாடினர்.

பெண்களின் எழுச்சி
இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, எந்த ஒரு சமூகமோ, நாடோ அதில் உள்ள பெண்களை பின்தங்கயிருக்கச் செய்தாலோ அவர்களின் திறமையையும் வலிமையையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல் இருந்தாலோ அந்த சமூகமும், நாடும் உண்மையான வளர்ச்சி அடைய முடியாது. நம் நாட்டில் இன்று பெண் சக்தியின் எழுச்சியும் மறுமலர்ச்சியும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிப்பதைக் காண்கிறோம். இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் படிப்பதைக் காண்கிறேன் எனத் தெரிவித்தார்.

ஆளுநரின் மனைவிக்கு கேள்வி
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஆளுமைகளில் ஒருவர், பெண்கள் இன்றைக்கு வேலைக்குச் செல்லத் தொடங்கினாலும், வீட்டு வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டியுள்ளது. இதை நீங்கள் எப்படி கடந்து வந்தீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி ரவியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி பேசினார்.

கணவரால் வெளியே செல்லவே முடியாது
அவர் பேசுகையில், வீடுகளைப் பொறுத்தவரை பெண்களிடம் தான் அதிகாரம் உள்ளது. உங்கள் பணிகளை நீங்கள் செய்யாவிட்டால் அந்த பணிகளையும் கணவர் தான் செய்ய வேண்டும் என்று கூறினால், கணவர்களால் ஒருநாளும் வெளியே செல்ல முடியாது எனத் தெரிவித்தார். ஆளுநர் ரவியும் இதை ஆமோதிக்க, அரங்கில் இருந்த பெண்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணின் பின்னாலும்
மேலும் பேசிய லட்சுமி ரவி, பெண் தொழில் முனைவோரின் பணி வீட்டிலிருந்தே தொடங்குகிறது. எனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை ஒப்பிட்டுச் சொல்கிறேன், ஒவ்வொரு பெண்ணும் ஒரு குடும்பத்தின் உந்து சக்தி. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணின் பின்னாலும் ஒரு ஆண் இருப்பார் என்று கூற முடியாது.

பெண்கள் கையில் இருக்கிறது
சமீபத்திய நாகாலாந்து தேர்தல் முடிவுகளில் நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண்கள் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளனர். நாகாலாந்தில் பெண்களுக்கு ஒரு காலத்தில் வாக்குரிமையே இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று மாற்றம் நடக்கிறது. ஆனால் அந்த மாற்றம் மெதுவாக உள்ளது. அனைத்தும் பெண்கள் கையில் தான் இருக்கிறது" என்று பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications