தமிழக இளைஞர்களை மெருகேற்ற மெகா திட்டம்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான அந்த ஒப்பந்தம்!
சென்னை: தமிழக இளைஞர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
தமிழக இளைஞர்கள் உலகெங்கும் தடையின்றி செல்ல ஆங்கில மொழியினை கற்றறியவும் கல்வி மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் பயனளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

பிரிட்டிஷ் கவுன்சில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து பிரிட்டிஷ் உயர் ஆணையர் (British High Commissioner) அலெக்ஸ் எல்லீஸ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்த 01.03.2022 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான புதியதோர் முன்னெடுப்பாக "நான் முதல்வன்" திட்டத்தினை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

தமிழக இளைஞர்கள்
இதன் நீட்சியாக தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவது மட்டுமின்றி, நேர்முகத் தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தங்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஆங்கிலம் கற்றறிய
அறிவுசார் இலக்கு மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறும் வகையில் இளைஞர் சமுதாயத்திற்கு திறன் பயிற்சியளித்து உலகெங்கும் தடையின்றி செல்ல ஆங்கில மொழியினை கற்றறியவும் கல்வி மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்திடவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பயிற்சி தரமான கல்வி மற்றும் சர்வதேச தரத்திலான மதிப்பீடுகளை இளைய சமுதாயத்திற்கு அளித்திட வழிவகுக்கும்.

புகழ்பெற்ற பல்கலை.
இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரத்யேக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு பயிற்சியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பயிற்சி தமிழக இளைஞர்களின் பல்வகையான திறன்களை மேலும் மெருகேற்ற வழிவகை செய்யப்படும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இளைஞர்களின் உயர்கல்வி, திறன் மேம்பாடு, கலை மற்றும் பண்பாடு ஆகியவை வலுப்படுத்தப்படும்.
பிரிட்டிஷ் கவுன்சில் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து தமிழகத்திலுள்ள நூலக வல்லுநர்கள் தொடர் தொழில்முறை முன்னேற்றத்திற்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
-
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications