Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு அரசின் மற்றொரு சிறப்பான முன்னெடுப்பு.. வெள்ளிக்கிழமை அன்று சத்தமே இல்லாமல் செம்ம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவாக சிறப்பு நிதி ஆதரவுத் திட்டத்தை அறிவித்திருப்பது தமிழக அரசின் மற்றொரு சிறப்பான முன்னெடுப்பு என்று பலரும் பாராட்டுகிறார்கள். இந்த திட்டம் எந்த அளவிற்கு முக்கியமானது. யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மகளிர் உரிமை தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம். தமிழ் புதல்வன் திட்டம், தாட்கோ மூலம் கடன் உதவி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுவரை நடத்தப்படும் திட்டங்களைவிட புதிதாக ஒரு திட்டம் சத்தமே இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் என்பது தமிழக அரசின் மற்றொரு சிறப்பான முன்னெடுப்பு என்று பேசப்படுகிறது.

TN Govt MK Stalin Tamil Nadu

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று சட்டசபையில் முக்கியமான ஒரு திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதுபற்றி பலருக்கும் தெரியவில்லை.. தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, நேற்று வெளியிட்ட அறிவிப்பு தான் பெரிய ஹைலைட் ஆகும்.

தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவாக சிறப்பு நிதி ஆதரவுத் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

ஏற்கெனவே இத்தகைய மண்டல ஸ்டார்ட் அப் மையங்கள் தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் அன்பரசன், கூடுதலாக சென்னை மெட்ரோ ஸ்டார்ட் அப் மையம் அனைத்து வசதிகளுடன் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதோடு, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய ஸ்டார்ட் ஒருங்கிணைவு மையங்கள் உருவாக்கப்படவுள்ளது என்றும், இது தமிழ்நாட்டில் உருவாகும் ஸ்டார்ட் அப்கள் தங்கள் வர்த்தகத்தை உலக அளவில் நிறுவ உதவியாக அமையும் என்றும் கூறினார். மேலும், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சென்னை மெட்ரோ மையத்தில் 'தொழில்நயம்' என்னும் நவீன வடிவமைப்பு ஸ்டூடியோ நிறுவப்படும் என்றும் அமைச்சர் தா மோ அன்பரன் கூறினார்.

ஸ்டார் அப் தவிர அமைச்சர் தா மோ அன்பரசன் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள் பற்றி பார்ப்போம்.

குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில் நிறுவனங்களின் மொத்த பணியாட்களின் எண்ணிக்கையில் 25 சதவீதத்துக்கு மேல் மாற்றுத் திறன் படைத்தவா்களை பணியில் அமா்த்தும் நிறுவனங்களுக்கு ஊதியப் பட்டியல் மானியமாக ஒரு மாற்றுத்திறனாளி பணியாளருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் வரை உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

படித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தற்போது வேலையில்லா இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயா்த்தப்படும். மேலும், தொழில் தொடங்க உள்ள மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படும். இதன் மூலம் அதிகப்படியான வேலையில்லா படித்த இளைஞா்கள் பயன்பெற இயலும்.

TN Govt MK Stalin Tamil Nadu

குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் தாய்கோ வங்கி மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் கடனுக்கு 10 சதவீத என்ற வட்டி விகிதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ஒரு நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் வகையில் கலைஞா் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படும். 2024-25 நிதியாண்டில் இதற்கென ரூ.100 கோடி தாய்கோ வங்கியால் ஒதுக்கப்படும்.

நீடித்த நிலையான பொருள்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முன்னேற்றம் அடையும் நோ்வு தொழிலாக வகைப்படுத்தப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு 25 சதவீத சிறப்பு முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தென்னை நாா் பொருள்கள் ஏற்றுமதி மையம்: தென்னை நாா் சாா்ந்த பொருள்கள் ஏற்றுமதியை மேம்படுத்த பொள்ளாச்சியில் ஏற்றுமதி மையம் தொடங்கப்படும்.

தமிழ்நாடு சிட்கோ மூலம் காஞ்சிபுரம் குன்றத்தூா் வட்டம் திருமுடிவாக்கத்தில் 2.47 ஏக்கரில் சுமாா் 500 நபா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.2.50 கோடியில் புதிய குறுந்தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

தமிழ்நாடு சிட்கோ மூலம் திண்டுக்கல் கொத்தயத்தில் 53.50 ஏக்கரில் சுமாா் 2 ஆயிரம் நபா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.16.58 கோடி திட்டமதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

தமிழ்நாடு சிட்கோ மூலம் தூத்துக்குடி மாவட்டம் சங்கராப்பேரியில் 23 ஏக்கரில் சுமாா் 1,000 நபா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.6.51 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்போட்டை அமைக்கப்படும். சிங்கப்பூா் மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் தொடங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+