தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் காலை 6 முதல் 7 மணி வரை, இரவு, 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க 4 நாட்கள் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் காலை 1 மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என மொத்தம் 2 மணி நேரம் அனுமதி வழங்கி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இது பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பண்டிகை நாளில் இந்த நேரத்தில் வெடிக்கக் கூடாது என்று தேவையற்ற கட்டுப்பாடுகளை திணிப்பது சரியல்ல எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்க்கும் தளமான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
இது முற்றிலும் தவறான தகவல். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு 2018 ஆம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications