வீடு வாங்குனீங்களா.. வீட்டுவசதி வாரியத்தின் வட்டி தள்ளுபடி திட்டம்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு அல்லது மனை அல்லது குடியிருப்பு ஆகிய அலகுகளில், 31.3.2015-ந்தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்காக, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு, மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வீட்டுவசதி வாரியத்தில் வீடு பெற்றவர்கள் நிலுவைத் தொகையை செலுத்ததாது தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு, வட்டி மற்றும் அபராதத் தொகையில் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

முழுத் தொகையையும் செலுத்திய பின்னரும் விற்பனைப் பத்திரம் பெறாதவர்களுக்கு, அதனை விரைந்து வழங்குவதற்காக சிறப்பு முகாம்களையும் அரசு அவ்வப்போது நடத்தி வருகிறது. அதேநேரம் நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களின் வீட்டு மனை ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதால், நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வப்போது எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகிறது. எனினும் நிலுவை தொகை பிரச்சனையை கருணை அடிப்படையில் அணுகும் அரசு, வங்கியை போல் அபராதம் விதிக்காமல், அபராத வட்டியை தள்ளுபடி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளது. அப்படி ஒரு அறிவிப்பினை தான் இப்போது அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு அல்லது மனை அல்லது குடியிருப்பு ஆகிய அலகுகளில், 31.3.2015-ந்தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்காக, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு, மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்தும்; நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும், விரைவாக விற்பனை பத்திரம் பெற வட்டித் தள்ளுபடி சலுகையை 31.3.2026 வரை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.
எனவே வட்டித் தள்ளுபடி திட்டத்திற்கு தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு, ஏற்கனவே நிலுவை தொகைக்கான தாக்கீது, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தகுதியான ஒதுக்கீடுதாரர்கள், இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி, தங்களது ஒதுக்கீட்டிற்கான நிலுவைத் தொகையை, ஒரே தவணையில் செலுத்தி, விற்பனைப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 31.3.2026 தேதிக்குப் பின்னர், நிலுவைத் தொகையை செலுத்த முன்வரும் ஒதுக்கீடுதாரர்களுக்கு இவ்வட்டித் தள்ளுபடி திட்டம் பொருந்தாது" இந்தத் தகவலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வெளியிட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications