TNPSC பதவி உயர்வில் சமூக நீதி.. ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் அரசுப் பணியாளர் தரவரிசைப் பட்டியல் மற்றும் பதவி உயர்வுகளில் சமூகநீதிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
பணி மூப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்று, அரசுப் பணியாளர் பதவி உயர்வு முறையில் சமூக நீதியின் தாக்கம் குறித்து சில கேள்விகளை எழுப்பியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் G.M.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவின் முதன்மையான நோக்கம், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் ஏற்பட்ட மாற்றங்கள், அவை வருங்காலத்தில் சமூக நீதி அடிப்படையிலான பதவி உயர்வுகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்வதாகும். மேலும், இந்த பாதிப்புகளை சரிசெய்யவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் தேவையான சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை இந்தக் குழு அரசுக்குச் சமர்ப்பிக்கும்.
மேலும், இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications