விவசாயிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! பயன்பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: பயிறு வகைகள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அவர்கள் லாபம் அடையக் கூடிய வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பச்சைப்பயிறு, உளுந்தம்பருப்பு உள்ளிட்ட பயிறு வகைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிறு சாகுபடி
தமிழகத்தில் பயறுவகை சாகுபடியினை ஊக்குவித்து, பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் பயறு உற்பத்தியினை அதிகரிப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி உயர்வு மட்டுமல்லாது, பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபகரமான விலை கிடைக்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயறு அறுவடைத் காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

வேளாண் நிதிநிலை
எனவே, கடந்த 2021-22 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயறு வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்து உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் உளுந்து, பச்சைப்பயறையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறைந்தபட்ச ஆதாரம்
அதன்படி, தமிழகத்தில் அரியலூர், ராணிப்பேட்டை, தேனி, கரூர், செங்கல்பட்டு, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய 23 மாவட்டங்களில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடமிருந்து 57,350 மெட்ரிக்டன் உளுந்துப் பயறை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.63 வழங்கப்படும்.

அரசு கொள்முதல்
அதேபோன்று, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 15 மாவட்டங்களில் பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடமிருந்து 14,282 மெட்ரிக்டன் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பச்சைப்பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 வழங்கப்படும்.

நிலச்சிட்டா
இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பிரதான கொள்முதல் நிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. நாஃபெட் நிறுவனம் ஒன்றிய கொள்முதல் முகமையாகவும் செயல்படுகின்றது.
கொள்முதல் செய்யப்படும் பயறு வகைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருப்பதை விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி நிலச் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

லாபகரமான விலை
விவசாயிகளின் விளைபொருட்களுக்கான தொகை சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். எனவே, பயறு வகை விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு இம்மாவட்டங்களின் பயறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications