தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு- அனைத்து கடைகளும் மூடல்- சாலைகள் வெறிச்சோடின!
சென்னை: தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் 2 வார லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுனின் தொடக்கத்தில் மளிகை கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்டவை பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.

இருந்த போதும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வலம் வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கடைகளின் திறப்பு நேரம் 4 மணிநேரமாக குறைக்கப்பட்டது. தேநீர் கடைகள் மூடப்பட்டன.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமை பால், மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பொதுவாக சாலைகள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே காணப்படுகின்றன. இன்றைய முழு லாக்டவுன் நாளை காலை 4 மணி வரை நீடிக்கும்.












Click it and Unblock the Notifications