சிலம்பம் வீரர்களுக்கு இனி இடஒதுக்கீடு..! திமுக அரசின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இடஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்த இடஒதுக்கீடு அடிப்படையில்தான் மாரியப்பன், சுபா உள்ளிட்ட பலருக்கும் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டில் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி உள்ளிட்டவைகளும் சேர்க்கப்பட்டன. மேலும் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் இதில் சேர்க்கப்படும் எனவும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனடிப்படையில் விளையாட்டு துறையினருக்கான 3% இடஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிலம்பம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன் அடைய உள்ளனர்.
ஏற்கனவே மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளிலும் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக பள்ளிகளில் சிலம்பம் குறித்த பாடப்பிரிவுகளை சேர்க்கவும், பல்கலைக்கழக அளவில் சிலம்பத்தை கொண்டு செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியிருந்தார். அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழ்நாட்டில் எங்கு தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் குழு அமைக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications