ஏழை மக்களுக்கு சூப்பர் செய்தி.. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்.. முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம் தான் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

TN govt increased the annual income limit for CMs Medical Insurance Scheme to Rs. 1.20 lakhs

இந்த காப்பீட்டுத் திட்டம் மூலம் ஏழை எளி மக்கள் அதிக செலவாகும் சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் பெறலாம்.

இந்த திட்டம் மூலம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் 1027 சிகிச்சை முறைகள், 154 தொடர் சிகிச்சை முறைகளில் சிகிச்சை பெறலாம்.

தமிழக அரசின் இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

இந்த ஆண்டு வருமான உச்ச வரம்பை உய்த்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில் அந்த வருமான வரம்பை ரூ 1.20 லட்சம் ரூபாயாகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வருமான வரம்பு உயர்வு ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இந்த புதிய உச்சவரம்பு நேற்று (டிசம்பர் 20, 2021) முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை ரூ 2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+