எப்படி இப்படியெல்லாம் பிளான் பண்றாங்க.. தமிழ்நாடு அரசின் செம திட்டம்.. கவனிக்கும் உலக சுகாதார மையம்
சென்னை: தமிழ்நாடு ஸ்டெப்ஸ் சர்வே 2023-24 இன் படி, தமிழ்நாட்டின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் (எம்டிஎம்) திட்டம் முக்கியமான சாதனைகளை படைத்துள்ளது. முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் ஆரம்பகட்ட வெற்றியை பெற்றுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரியவர்களிடையே இரத்த அழுத்தக் கட்டுப்பாடு 17% ஆகவும், நீரிழிவு நோயாளிகளிடையே இரத்த சர்க்கரை கட்டுப்பாடு 16.7% ஆகவும் இந்த திட்டம் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் கவனம் பெற்று வரும் நிலையில் இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக முக்கியமான சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 2021 ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது.பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று மருந்து சேவைகள் வழங்கும் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பொதுவான நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது. உலக சுகாதார மையத்தின் டார்கெட்டை மனதில் வைத்து தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை நிர்வகித்து வருகிறது.

அதிர்ச்சி தரும் தகவல்கள்:
இதில் செய்யப்பட்ட சோதனையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2 ஆண்டுகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 55.1 லட்சம் புதிய உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த திட்டம் இல்லை என்றால்.. இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டே இருக்க மாட்டார்கள். இந்த சோதனை இல்லை என்றால் இவர்களின் ரத்த அழுத்தம் உச்சத்திற்கு போக.. இவர்கள் பாதிப்பு அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
31.53 லட்சம் சர்க்கரை நோயாளிகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை இல்லையென்றால் சர்க்கரை வியாதி மோசம் அடைந்த பின் இவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 26.15 லட்சம் நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பில் இதுவரை தமிழ்நாட்டில் 112 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க திட்டம்
தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மருந்து வழங்குதல் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக வீட்டிற்கே சென்று நோயாளிகளை கண்காணிப்பது, அவர்களுக்கு தவறாமல் இலவச மருந்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் 140 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர். சூப்பர் யோசனை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் கவனம் பெற்று வரும் நிலையில் இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக முக்கியமான சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி முதல் கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.53 லட்சம் பணியாளர்களுக்கு நடத்தப்பட உள்ளது.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றாநோய் பரிசோதனைகளை முதல் கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.53 லட்சம் பணியாளர்களுக்கு நடத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் தொழிற்சாலை உட்பட எல்லா இடங்களிலும் இதற்கான முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில்தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் கவனம் பெற்று வருகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications