Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ் நிறுத்தும் உணவகங்களில் மக்கள் சாப்பிடாமல் கழிவறைக்கு மட்டுமே செல்வதால் கழிவறைக்கு கட்டணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசு பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களில் மக்கள் சாப்பிடாமல் கழிவறைக்கு மட்டுமே செல்வதால் கழிவறைக்கு கட்டணம் வசூலிக்க திமுக அரசு விதிகளை திருத்தி உள்ளது என அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "நெடுஞ்சாலை உணவக உரிமையாளர்கள் மற்றும் ப்ரோக்கர்கள் கோரிக்கையை ஏற்று கழிவறைக்கு கட்டணம் வசூல் செய்ய விதிகளை திருந்திய அமைச்சர் சிவசங்கர் மற்றும் MD இளங்கோவன் ஆகியோர் அதற்கு ஒரு வேடிக்கையான காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

TN govt plan to collect toilet fees at the food stops of government buses : Arappor Iyakkam

யாருமே இந்த உணவகங்களில் சாப்பிடுவதில்லையாம். ஆகையால் கழிவறை காசு வாங்கியாவது உணவக உரிமையாளர்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என்று 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளார்களாம்.

சரி அப்போ அமைச்சரும், MDயும் அந்த உணவகங்களில் தைரியமாக சாப்பிடுவார்களா? நோய் பரப்பும் சுகாதாரமற்ற அந்த உணவக கழிவறையை அவர்கள் வீட்டு பெண்மணிகள் பயன்படுத்த அனுமதிப்பார்களா? மாட்டார்கள்.

ஆனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பாமர மக்களுக்கு வேறு வழி இல்லையே. இந்த உணவகங்களில் தினம் தினம் அவர்கள் அனுபவிக்கும் துயரம் உங்களுக்கு சிறிதளவாவது புரிந்திருந்தால் இப்படி ஒரு வேலையை செய்திருக்க மாட்டீர்கள்.

பாமர மக்கள் பயணம் செய்யும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதி இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அரசாங்கத்துக்கு Email மூலம் தெரிவிக்க அழைக்கிறோம்.

உங்கள் கணினி அல்லது மடிக்கணினி மூலம் இந்த இணைப்பை https://bit.ly/WeNeedFreeToilet_SETC கிளிக் செய்து Send பட்டன் அழுத்தினால் உங்கள் கோரிக்கையை அரசு போக்குவரத்து துறைக்கு தெரிவிக்கலாம்." என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட் பதிவில், "அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் உணவின் தரமும் சரியில்லை விலையும் அதிகம். அந்த காரணத்தினால் தான் மக்கள் அங்கே சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் பயணத்தின் போது கழிவறை பயன்படுத்துவது அத்தியாவசிய தேவை. தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசாங்கம் கழிவறைக்கு காசு வாங்கி கொடுக்கும் வேலையை செய்வது கேவலத்திலும் கேவலம்.

உணவக உரிமையாளர்கள் அனைவரும் வந்து MD இளங்கோவனிடம், ஐயா ஐயா எங்க உணவகத்தில் யாருமே சாப்பிடுவதில்லை, கழிவறை மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள் அதனால் நாங்கள் உணவகம் நடத்தி சம்பாதிப்பதற்கு பதிலாக கழிவறைக்கு காசு வாங்கி சம்பாதித்து கொள்கிறோம் என்று கேட்டார்களாம்.

அப்போ இளங்கோவன் என்ன சொல்லி இருக்கணும்? ஐயா உணவக உரிமையாளர்களே நீங்க தரமான ருசியான உணவை சரியான விலையில் கொடுத்தால் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களை தேடி சென்று மக்கள் சாப்பிடுவது போல உங்கள் உணவகத்திலும் கூட்டமாக வந்து சாப்பிடுவார்கள். அதற்காக அந்த உணவகங்கள் கூட இலவசமாக கொடுக்கும் மக்களின் அத்தியாவசிய தேவையான கழிவறைக்கு கட்டணம் வாங்குவது அசிங்கம். அரசாங்கத்துக்கு அவமானம். அப்படி எல்லாம் டெண்டர் விதிகளை மாற்ற முடியாது என்று சொல்லி இருக்கணும்.

TN govt plan to collect toilet fees at the food stops of government buses : Arappor Iyakkam

ஆனால் அவர் அப்படி சொல்லாமல் விதிகளை மாற்றி உணவக டெண்டரை கக்கூஸ் டெண்டராக மாற்றி விட்டார். மக்கள் சார்பாக அதிகாரிகளின் பணிகளை கண்காணிக்க வேண்டிய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்திற்கும் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

முதல்வருக்கும் அமைச்சருக்கும் மக்களின் இந்த கஷ்டம் காதில் விழும் வரை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம். " என்று அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+