கொலை செய்துவிட்டு சாவகாசமாக வேறு நீதிமன்றத்தில் சரண்.. தடை செய்யனும் - உயர்நீதிமன்றத்தில் அரசு வாதம்
சென்னை: கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தலைமறைவாகி ஒரு கட்டத்தில் வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறி, கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளார்.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஆறாவமுதன். இவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அத்துடன் அரிவாள் கொண்டும் வெட்டியது. இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த, 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சாரணடைய அடைய வேண்டும் என்றும் வேறொரு நீதிமன்றத்தில் சரண்டைய முடியாது என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் சத்தியமங்கலம் மாஜிஸ்திட்ரேட், சரண்டரை ஏற்றிருக்க கூடாது என்றும், ஊக்குவித்து இருக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் இதுபோல் சரணடைவதால் வழக்கு விசாரணை பாதிக்கும், உண்மையான குற்றவாளிகள் சரடையாமல் போலியான நபர்களை சரணடைய வைப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் சத்தியமங்கலம் நீதிமன்றம் சரண்டர் ஏற்றுக்கொண்டு இருப்பது உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவையும் தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய உத்தரவாக பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications