சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பெருந்துறை மருத்துவ கல்லூரி இருந்து வந்தது. இந்த கல்லூரி 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

TN Govt reduces fees for Erode Medical College

தற்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிறப்பு மருத்துவமனை என இது இயங்கியும் வருகிறது. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் தனியார் மருத்துவ கல்லூரி கட்டணங்களே இங்கும் பெறப்பட்டது.

இதற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2 வாரங்களாக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரி கட்டணமான ரூ13,610 மட்டும் வசூலிக்கப்படும் என இன்று அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

English summary
Tamilnadu Govt reduced the fees for Erode Medical College.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X