Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பிரிவினைவாத செயல்- ஹெச்.ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பிரிவினைவாத செயல் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

Recommended Video

    H Raja-வின் சர்ச்சை பேச்சு - Thirumavalavan ஒரு சமூகவிரோதி | Oneindia Tamil

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. இந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்பது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்வி.

    இந்நிலையில் நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நீட் தேர்வு முதல் முறையாக நடத்தப்பட்டது. இதனிடையே நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தால் மேட்டூர் அருகே மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார்.

     நாளை நீட் தேர்வுக்கு எதிரான மசோதா

    நாளை நீட் தேர்வுக்கு எதிரான மசோதா

    தமிழகத்தில் அனிதா தொடங்கி நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் மரணிப்பது தொடர் நிகழ்வாகி இருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கி வருகின்றன. மாணவர் தனுஷ் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியிருந்தார்.

    மேலும் மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

     நீட் தீர்மானம் - பிரிவினைவாதம்

    நீட் தீர்மானம் - பிரிவினைவாதம்


    இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வகிக்கும் பொறுப்புக்கு நான் அறிவுரை சொல்ல விரும்பவில்லை. ஒரு யோசனை மட்டும் சொல்கிறேன். நாட்டில் இருவிதமான சட்டங்கள் இருக்கின்றன. ஒன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படுகிறவை; மற்றொன்று நீதிமன்றத்தால் கொண்டுவரப்படுகிறவை.

    நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அப்படி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் போடுவது என்பது; நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் போடுவது என்பது பிரிவினைவாதச் செயல். அது சரி இல்லை. ஆகையால் நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும்.

     நீட் தேர்வை தடுக்க முடியாது

    நீட் தேர்வை தடுக்க முடியாது

    நீட் தேர்வை யாரும் எதுவும் செய்ய முடியாது. நீட் தேர்வு நடப்பதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்கவே முடியாது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என பேசுகிறவர்தான் கல்வி அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்.

    நீட் தேர்வுக்கு தயாராவதற்காக மட்டுமே ஜெயலலிதா விலக்கு கேட்டிருந்தார். நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என மறைந்த ஜெயலலிதா அம்மையார் கேட்கவில்லை. நீட் தேர்வு தயாரிப்புக்கு பல ஆண்டுகள் கொடுத்தாகிவிட்டது. நீட் தேர்வுக்கு தயாராகவில்லை எனில் அரசாங்கத்தின் கல்வித்துறையின் தவறு.

     தோல்வி அடைந்த திமுக அரசு

    தோல்வி அடைந்த திமுக அரசு

    திமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் அறிக்கையில் கொடுத்த சின்ன சின்ன வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் முதல் அகவிலைப்படி கொடுத்து வருகிறது. ஆனால் தமிழக நிதி அமைச்சரான நீதிக் கட்சியின் வாரிசு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அடுத்த ஆண்டுதான் அகவிலைப்படி கொடுக்க முடியும் என்கிறார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என்றது திமுக. ஆனால் இப்போது நினைத்ததை எல்லாம் கொடுத்துவிட முடியுமா? காசு எங்கே இருக்கிறது? கொடுக்க முடியாது என்கிறார்கள்.

    அதேபோல் குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது தகுதி உள்ள குடும்ப தலைவிகளை கண்டுபிடித்து தருவோம் என்கிறார்கள். இது எனக்கு 1967-ம் ஆண்டை நினைவுபடுத்துகிறது. ரூபாய்க்கு 3 படி அரிசி என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை பெரியவர் பக்தவச்சலம் விமர்சித்தார். அதற்கு காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணா, எனக்கு திருமணம் செய்து வைத்தால் 10 மாதங்களில் ஆண்குழந்தை பெற்றுத்தருகிறேன். ஆனால் திருமணமே செய்துவைக்காமல் பேசுவது சரியா என்றார். அதேநிலைதான் இப்போது.. குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000 கொடுப்போம் என சொல்லிவிட்டு இப்போது தகுதியுள்ளவரைத் தேர்ந்தெடுத்து என பேசுகிறீர்கள்.. என்ன தகுதி வைக்கப் போகிறீர்கள்? ஆகவே இந்த அரசாங்கம் நிதி அடிப்படையில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+