Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தேர்தல் வருவதால் ஓய்வூதியம் என ஏமாற்று வேலை” - நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியம் ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெயிட்டுள்ளார்கள்" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து இன்று திருச்சி விமான நிலையம் வந்த நயினார் நாகேந்திரனுக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக அரசின் ஆயுட்காலம் முடிவடையக்கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்? செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது?

TN Govt s Pension Announcement a Election Gimmick After Five Years of Inaction Nainar Nagendran

ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? திமுக தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு திமுகவின் வாடிக்கையான ஏமாற்று வேலை.

நாளை புதுக்கோட்டையில் பாஜக யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வைக்கும் கட்சிகளும் கூட்டணியில் சேரப் போகும் கட்சிகளும் கலந்து கொள்வார்கள். அமித் ஷா எப்போது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுதான் செல்வார். என்ன மாதிரியான மாற்றங்கள் என்பது அவர் வந்து சென்ற பின்புதான் தெரியும்.

யார் முதல்வராக வரவேண்டும் என்பதை காட்டிலும் யார் முதல்வராக தொடரக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி.
போலி மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கக்கூடிய ஆட்சி. உண்மையான மதச் சார்பின்மையை கடைபிடிக்க கூடிய கட்சிதான் பாஜக. நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வந்தன. வருகிற 6 ஆம் தேதியில் இருந்து காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்தன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன. இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது.

அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பிறகு இன்று ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+